சிம்பாபே அணிக்கு எதிரான நேற்றைய(30) முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி தோல்வியினை தழுவியது.
இது குறித்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த இலங்கை அணியின் தலைவர் ஏஞ்சலோ மேத்யூஸ்;
“..யார் என்ன கூறினாலும் பிடியெடுப்புக்கள் தவறவிடப்படுகின்றமை போட்டியின் தோல்விக்கு காரணம், அது தவிர போட்டியின் தோல்விக்கு பொய்யான காரணங்களை முன்வைக்க விரும்பவில்லை.. பிடிகள் தவறவிடப்படுகின்றமையாலா தோல்வி ஏற்படுகின்றது என ஆராய அவசியமில்லை.. கடந்த பாகிஸ்தான் அணியுடனான போட்டியிலும் களத்தடுப்பில் பிடிகளை தவறவிட்டதாலேயே தோல்வியடைந்தோம்..”
“..குறித்த இந்தப் போட்டியில் நாம் ஒழுங்காக பந்து வீசவும் இல்லை, ஓட்டங்களை பெறவும் இல்லை அதுதான் உண்மை. உண்மையிலேயே பந்துவீச்சாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. முக்கிய போட்டிகளில் தோல்வியினை தழுவினோம். எதிர்வரும் போட்டிகளில் சிறந்த வீரர்களை அணியில் உள்வாங்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்..” என மேத்யூஸ் தெரிவித்திருந்தார்.
0 Comments