Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்புக்கு பிரதமர் விஜயம்

கிழக்கு மாகாண முதலமைச்சரின் அழைப்பை ஏற்று, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று (28) பிற்பகல் மட்டக்களப்பை வந்தடைந்தார்.
இலங்கை விமானப்படை ஹெலிகொப்டர் மூலம் மட்டக்களப்பு விமான நிலையத்தில் வந்திறங்கிய பிரதமரை, கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட் வரவேற்று அழைத்து வந்தார்.
கிழக்கு மாகாண முதலமைச்சர் தலைமையில், கல்லடி ஈஸ்ட் லகூண் ஹொட்டலில் இடம்பெற்ற  கூட்டத்தில், கிழக்கு மாகாண ஆளுநர், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் உட்பட பல்வேறு அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
எதிர்வரும் 30ஆம் திகதி ஏறாவூர் மற்றும் ஆரையம்பதி பகுதிகளில் அபிவிருத்தி திட்டங்கள் ஆரம்ப நிகழ்வில் பிரதமர் கலந்துகொள்ளவிருந்த நிலையில், அந்த நிகழ்வு ஓகஸ்ட் 20ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments