Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

பிரதமர் பதவி நீக்கப்பட்டதை தொடர்ந்து அரசியல் குழப்ப நிலையை எதிர்கொள்ளும் பாக்கிஸ்தான்

ரொய்ட்;டர் – சமகளம்
பாக்கிஸ்தான் பிரதமர் நவாஸ் செரிப்பின் அறிவிக்கப்படா சொத்துகுவிப்பிற்காக அவரை பிரதமர் பதவியிலிருந்து அந்த நாட்டின் நீதிமன்றம் அகற்றியுள்ளதை தொடர்ந்து பாக்கிஸ்தான் மீண்டு;ம் அரசியல் குழப்பநிலையை எதிர்கொண்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவு வெளியானதை தொடர்ந்து பிரதமர் உடனடியாக தனது பதவியை இராஜினாமா செய்துள்ள அதேவேளை அவரது அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் நீதிமன்ற தீர்ப்பு குறித்த கடும் அதிருப்தி
2013 நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்ற நவாஸ் செரீப்பின் முஸ்லீம் லீக் கட்சி அடுத்த தேர்தல் வரை பதவி வகிப்பதற்காக புதிய பிரதமரை நியமிக்கவுள்ளது.
paki2
பாக்கிஸ்தானின் புதிய பிரதமராக பாதுகாப்பு அமைச்சர் அசீவ் கவாஜா அல்லது திட்டமிடல் அமைச்சர் அக்சன் இக்பால் அல்லது பெட்ரோலிய துறை அமைச்சர் சகீட் அபாசி ஆகிய மூவரில் ஓருவர் நியமிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக அந்த நாட்டின் அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்
புதிய பிரதமர் அமெரி;க்காவுடன் மோசமடைந்து வரும் உறவுகள், இந்தியாவுடன் தீவிரமடைந்து வரும் பதட்டம் மற்றும் இஸ்லாமிய தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் ஆகியவற்றை எதிர்கொள்ளவேண்டியிருக்கும்.சீனாவுடனான உறவு காரணமாக பாக்கிஸ்தானின் பொருளாதாரம் பலனடைந்துள்ள போதிலும் வெளிநாட்டு நாணய கையிருப்பு குறைவது ஏற்றுமதிகள் வீழ்ச்சியடைவது குறித்து பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பாக்கிஸ்தானின் பிரதமராக மூன்று முறை பதவி வகித்துள்ள 67 வயது நவாஸ்செரீப் பதவிநீக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து பாக்கிஸ்தானின் பலவீனமாக ஜனநாயகம் குறித்த கேள்விகளும் எழுந்துள்ளன.
1947 சுதந்திரத்திற்கு பின்னர் எந்த பாக்கிஸ்தான் பிரதமரும் தனது பதவிக்காலத்தை முழுமையாகபூர்த்தி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நீதிமன்ற தீர்ப்பு கிரிக்கெட் வீரர் இம்ரானிற்கு பெரும் அரசியல் வெற்றியாகவும் அமைந்துள்ளது.செரீப்பின் சொத்துக்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளாவிட்டால் பாரிய வீதி ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்கப்போவதாக அவர் எச்சரித்திருந்தார். நவாஸ் செரீப்பின் வெளிநாட்டு சொத்துக்களை பனாமா பேப்பர் அம்பலப்படுத்தியதை இம்ரான் கான் பயன்படுத்திக்கொண்டார்.
இன்று பாக்கிஸ்தானின் வெற்றிநாள் இன்று முதல் பாக்கிஸ்தானின் முக்கிய திருடர்கள் பிடிபடுவார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
pakistan
இம்ரான் கான் தனக்கான வருமானம் எங்கிருந்து வருகின்றது என வெளிப்படுத்த தவறியதால் நீதிமன்ற விசாரணைக்கு உள்ளாகியுள்ளார். எனினும் அவர் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.
பிரதமரின் நெருங்கிய நண்பரான நிதியமைச்சர் இசாக் டார் குறித்த விசாரணைகளிற்கும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாக்கிஸ்தானின் துரித பொருளாதார வளர்ச்சிக்கு இவரே காரணம் என சுட்டிக்காட்;டப்படுவது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை ஆய்வாளர்கள் பாக்கிஸ்தானில் அரசியல் குழப்பநிலை ஏற்பட்டால் பொருளாதார நிலை பாதிக்கப்படும் என எச்சரித்துள்ளனர்.
பாதுகாப்பு அச்சம் மற்றும் கடும் சட்டவிதிகள் காரணமாக வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பாக்கிஸ்தான் குறித்து தயக்கமடைய ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments