Home » » இந்துசமய சமூக அபிவிருத்தி சபையினால் இசைக்கருவிகள் வழங்கி வைப்பு

இந்துசமய சமூக அபிவிருத்தி சபையினால் இசைக்கருவிகள் வழங்கி வைப்பு

( எஸ்.ஸிந்தூ)
கிழக்கிலங்கை இந்துசமய சமூக அபிவிருத்தி சபையினால் 40ம் கிராம சக்தி கலா மன்றத்திற்கு கடந்த திங்கட்கிழமை (26) இசைக்கருவிகள் வழங்கி வைக்கப்பட்டன.
கிழக்கிலங்கை இந்து சமூக அபிவிருத்தி சபையின் தலைவர் த.துஷ்யந்தன் தலமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் போரதீவுப்பற்று கோட்ட கல்வி அதிகாரி பூ.பாலச்சந்திரன் தேசிய மனிதவள அபிவிருத்தி சபையின் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சின் உதவிப்பணிப்பாளர் சி.தணிகசீலன் வெல்லாவெளி கலைமகள் வித்தியாலய அதிபர் திரு.கணேசமூர்த்தி சமூர்தி அபிவிருத்தி உத்தியோதகஸ்தர் ஆலய பிரதம குரு ஆலய நிர்வாக தலைவர் மற்றும் நிர்வாக சபை உறுப்பினர்கள் சக்தி கலா மன்ற தலைவர் மற்றும் நிர்வாக உறுப்பினர்கள் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.  
இக்கிராமத்திலுள்ள மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே கூட்டு வழிபாட்டை ஊக்குவிப்பதை நோக்காகக் கொண்டு இந்த இசைக்கருவிகள் வழங்கி வைக்கப்பட்டன. இந்த கூட்டு வழிபாட்டின் ஊடாக பக்தி, இசை மற்றும் ஒருமைப்பாடு என்பனவற்றை பொதுமக்களிடையே வளர்ப்பதை நோக்காகக் கொண்டு இவை வழங்கி வருகின்றன என கிழக்கிலங்கை இந்து சமூக அபிவிருத்தி சபையின் தலைவர் த.துஷ்யந்தன் தனது தலைமையுரையின் போது தெரிவித்தார்.
“மட்டக்களப்பு மாவட்டம் இலங்கையின் பின்தங்கிய மாவட்டங்களுள் ஒன்றாகும். யுத்தம், அனர்த்தம், வறுமை, வேலையின்மை போன்ற இன்னோரன்ன காரணங்களால்  மீண்டெழுந்து வர முடியாமல் வறுமைக் கோட்டின் கீழ் வாழுகின்ற அதிக மக்களைக் கொண்ட ஒரு மாவட்டமாகும். குறிப்பாக எமது மாவட்டம் கல்வியில் வறுமையை அதிகளவில் கொண்ட ஒரு பிரதேசமாகும். காரணம் மட்டக்களப்பு மாவட்டத்தில் எழுபத்தைந்து சதவீதத்திற்கு மேற்பட்ட மக்கள் பின்தங்கிய கிராமப்புறங்களில் வாழ்ந்து வருகின்றார்கள். 
ஆதிதிகளின் உரையினை தொடர்ந்து மாணவச்செல்வங்களினது கலை நிகழ்வுகளினையும் தொடர்ந்து முன்னால் சக்தி கலா மன்ற தலைவர் திரு. கந்தப்போடி அவர்களின் நன்றி உரையுடன் இந்நிகழ்வு இனிதே நிறைவுற்றது.பாடசாலை மட்டத்தில் குறிப்பிடப்படுகின்ற கஸ்ட்ட, அதிகஸ்ட்ட பிரதேசங்களில் வாழ்ந்து வருகின்றவர்கள்தான் ஒட்டு மொத்த மட்டக்களப்பு மாவட்டத்திற்கு உணவை உற்பத்தி செய்து வழங்குகின்ற விவசாயிகளாக இருக்கின்றனர். இருந்தபோதிலும், மேற்கூறிய காரணங்களினால் நலிவுற்ற ஒரு சமூகமாக இவர்கள் காணப்படுகின்றனர். இதனால் இலகுவில் பாதிப்படையக்கூடிய ஒரு பிரிவினராக எமது கிராமப்புறங்களில் வாழுகின்ற மக்கள், எல்லாவற்றையும் இழந்த நிலையில் வாழ்ந்து வருவதனைக் காணக்கூடியதாகவுள்ளது. இதன் காரணமாக அவர்களுடைய பாரம்பரியம், கலாசாரம், ஒழுக்க விழுமியங்கள், பண்பாடு, கலை வடிவங்கள் என்பனவற்றை கட்டிக் காக்க முடியாத ஒரு துர்ப்பாக்கிய நிலையில் எமது சமூகம் பின் தள்ளப்பட்டுள்ளது.” என இந்நிகழ்வில் அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றிய, தே.ம.வ.அ.ச இன் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சில் கடமையாற்றும் உதவிப்பாளர் திரு.சி.தணிகசீலன் அவர்கள் தெரிவித்தார்.
ஆதிதிகளின் உரையும் மாணவச்செல்வங்களினது கலை நிகழ்வுகளினையும் தொடர்ந்து முன்னால் சக்தி கலா மன்ற தலைவர் திரு. கந்தப்போடி அவர்களின் நன்றி உரையுடன் இந்நிகழ்வு இனிதே நிறைவுற்றது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |