Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பு குருக்கள்மடம் ஸ்ரீ கிருஸ்ணன் கோயில் 7ம் நாள் சப்புற வீதி உலாவும் தீர்த்தோற்சவமும்

குருக்கள்மடம் ஸ்ரீ கிருஸ்ணன் கோயிலின் 7ம் நாள் சப்புற வீதி உலா மிகச் சிறப்பாக நடைபெற்றது. அந்த வகையில் 29.06.2017 அன்று மாலை 7.30 மணிக்கு ஊர்வலம் ஆரம்பமாகியது. இதில் பாண் வாத்திய குழுவின் இசையுடன் பக்கதர்கள் ஆடிய வண்ணம் முன்னால் செல்ல  அடுத்ததாக  கிருஸ்ணகுமார் குழுவினரால் உழவு இயந்திரத்தில் அழகாக அலங்கரிக்கப்பட்ட கண்ணபிரானின் படமும் அதனைத் தொடர்ந்து கோலாட்டம்  செம்பு நடனம் மயில் நடனம் என்பனவும்  இறுதியாக பெருமாள் சப்புறத்தில் பஜனைப் பாடல்களோடும் வீதியால்  ஊர்வலம் வந்தமையானது கண்கொள்ளாக் காட்சியாக அமைந்திருந்தது. வரலாறு காணத நிகழ்வாக இது காணப்படுகின்றது. இதில் அதிகளவான பக்தர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும். அதனைத் தொடர்ந்து 30.06.2017 அன்று பெருமாள் சமூத்திர த்தில் தீர்த்தமாடச் சென்று பின்னர்  பெருமாளை  ஊஞ்சலாட்டும் நிகழ்வும் அலங்கார சைகளும் அன்னதானமும் இடம்பெற்று இனிதே நிறைவுற்றது.  7ம் நாள் திருவிழாவினை திரு.க.ஞானரெத்தினம் குடும்பம்  நிகழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்க அம்சமாகும். இந்நிகழ்வுகளை படங்களில் காணலாம்.





























Post a Comment

0 Comments