முதல்போட்டியில் ஏற்பட்ட தோல்வியிலிருந்து மீண்டெழுந்து வந்து கிண்ணத்தை கைப்பற்றுவது என்பது அற்புதமான சாதனை நான் எனது அணி குறித்தும் பெருமிதம் அடைந்துள்ளேன் என பாக்கிஸ்தான் அணியின் பயிற்றுவிப்பாளர் மிக்கி ஆர்தர் தெரிவித்துள்ளார்
பாக்கிஸ்தான் இந்தியாவை 180 ஓட்டங்களால் தோற்கடித்து ஐசிசி சம்பியன்ஸ் கிண்ணத்தை கைப்பற்றிய பின்னரே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
பாக்கிஸ்தான் இந்தியாவை 180 ஓட்டங்களால் தோற்கடித்து ஐசிசி சம்பியன்ஸ் கிண்ணத்தை கைப்பற்றிய பின்னரே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அணியை பொறுத்தவரை கடந்த காலம் என்பது எழுச்சியும் வீழ்ச்சியும் நிறைந்த பயணமாக காணப்பட்டது. எனினும் நான் என் வீரர்களை பார்த்து பெருமையடைகிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.
நாங்கள் எங்களை சிறப்பாக தயார்ப்படுத்தியிருந்தோம் என்பது எங்களிற்கு நன்கு தெரியும் முதல்போட்டியில் விளையாடியதை விட எங்களால் சிறப்பாக விளையா முடியும் என்பதும் எங்களிற்கு தெரிந்திருந்தது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
முதல்போட்டியில் ஏற்பட்ட தோல்வியிலிருந்து மீண்டெழுந்து வந்து கிண்ணத்தை கைப்பற்றுவது என்பது அற்புதமான சாதனை நான் எனது அணி குறித்தும் பெருமிதம் அடைந்துள்ளேன் என்றும் மி;க்கி ஆர்தர் தெரிவித்துள்ளார்
தனது சொந்த மண்ணில் பல வருடங்களாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் எதனையும் பார்த்திராத பாக்கிஸ்தான் தனது கதாநாயகர்களை இனம்காண்பதற்கு இந்த வெற்றி உதவியுள்ளது
இந்த வெற்றி பாக்கிஸ்தான் கிரிக்கெட்டிற்கு புதிய யுகத்தை ஆரம்பித்து வைக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
0 Comments