அமெரிக்க கடற்படையின் நாசகாரி கப்பல் கொள்கலன் கப்பலொன்றுடன் மோதிய விபத்தின் போது காணமல்போன கடற்படை மாலுமிகளின் உடல்கள் மீட்கப்பட்டு;ள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சேதமடைந்த கப்பலின் உள்ளே நீர் நிரம்பிய பகுதியொன்றிற்குள் உடல்கள் காணப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காணமல்போனதாக அறிவிக்கப்பட்ட மாலுமிகள் அனைவரினது உடல்களும் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சுழியோடிகள் கப்பலின் உள்ளே நீர் நிரம்பிய பகுதிக்குள் சென்று உடல்களை மீட்டுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.அமெரிக்க கடற்படையின் நாசகாரி கப்பலொன்று ஜப்பான் கடற்பகுதியில் மற்றுமொரு கப்பலுடன் மோதியதன் காரணமாக அமெரிக்க கடற்படையின் மாலுமிகள் ஏழு பேர் காணமற்போயுள்ளனர் என அதிகாரிகள் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவின் கடற்படை நாசகாரியான யுஎஸ்எஸ் பிட்ஸ்ஜெரால்ட் கொள்கலன் கப்பலொன்றுடன் மோதியதாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
0 Comments