நோயாளிகளுக்கான இரத்த சோதனை தொடர்பான கட்டணம் இன்று முதல் குறைக்கப்படுமென சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. டெங்கு நோய் தீவிரமாக பரவி வருவதை தொடர்ந்தே இவ்வாறு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தனியார் வைத்தியசாலைகள் மற்றும் ஆய்வுகூடங்களில் மேற்கொள்ளப்படும் இரத்த சோதனைக்கான கட்டணம் இதன் அடிப்படையில் குறைக்கப்படவுள்ளது. முழுமையான இரத்த சோதனைக்கான கட்டணம் 250 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது. டெங்கு நோய் தொடர்பான சோதனை கட்டணம் ஆயிரம் ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது. இக்கட்டணம் குறைப்பு தொடர்பாக தனியார் வைத்தியசாலைகள் மற்றும் ஆய்வுகூடங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
காய்ச்சலால் தாக்கப்பட்ட ஒருவர் டெங்கு நோய் பரிசோதனையை மேற்கொள்ள புல் பிளட் கவுன் எனும் சோதனையை நடத்துகிறோம். இச்சோதனையை மேற்கொள்ளவதற்கான கட்டணங்களில் பாரிய வித்தியாசங்கள் உள்ளன. ஆகவே அரசாங்கம் மறு அறிவித்தல் விடுக்கும் வரை இக்கட்டணத்தை பொது மக்கள் தாங்கும் வகையில் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதனை 250 ரூபாவாக நிர்ணயிக்க தீர்மானித்துள்ளோம். அத்துடன் டெங்கு என்டிஜென் சோதனை போன்றவற்றை ஆயிரம் ரூபாவுடன் வரையறுப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. திங்கள் முதல் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என இது தொடர்பில் அண்மையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஜயசுந்தர பண்டார இவ்வாறு தெரிவித்திருந்தார்.
0 Comments