வடமாகாண சுகாதார அமைச்சருக்கு ஆதரவாக மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது அதில் கலந்து கொண்டவர்கள் பிரதேசவாதக் கருத்துக்களை கடுமையாக பயன்படுத்தி இருந்தனர். இது குறித்து பலரும் கடும் விசனம் தெரிவித்துள்ளனர்.
வடமாகாண சுகாதார அமைச்சருக்கு ஆதரவாகவும், அவர் ஊழல் அற்றவர் எனவும் வவுனியா மாவட்ட செயலகம் முன்பாக தமிழரசுக் கட்சியின் வவுனியா கிளை உறுப்பினர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது அவ் ஆர்ப்பாட்டத்தை கைவிடுமாறு அவ்விடத்திற்கு வந்த முதலமைச்சரின் ஆதரவாளர்கள் கோரிய போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் நாம் வவுனியாக்கரன், வன்னஜியான் என பிரதேசலவாதக் கருத்துக்களை கடுமையாக கடுமையாக பயன்படுத்தியதுடன் யாழ்ப்பாணத்தான் கதைக்க தேவையில்லை எனவும் தெரிவித்தனர். இதனால் அங்கு நின்ற பலரும் கடும் விசனம் அடைத்தனர்.
இக் கருத்துக்கள் பயன்படுத்தப்பட்ட போது குறித்த ஆர்ப்பாட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜா அவர்களும் கலந்து கொண்டார். அவரிடம் பிரதேசவாதக் கருத்துக்களை நீங்கள் ஏற்றுக் கொள்கின்றீர்களா என ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி கேட்ட போது,
பிரதேசவாதக் கருத்துக்களை நான் ஆதரிக்கவில்லை. அப்படி பேசப்பட்டது எனக்கு தெரியாது எனத் தெரிவித்தார்.
0 Comments