Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

இன்றும் மழையுடன் கூடிய காலநிலை

நாட்டின் மேற்கு, சப்ரகமுவ, தெற்கு, மத்திய மாகாணங்களில் மழை பெய்யும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
குறிப்பாக இரத்னபுரி ,களுத்துறை மற்றும் கேகாலை மாவட்டங்களில் மணிக்கு சுமார் 75 மில்லிமீற்றர் மழை பெய்யும் என்று வளிமண்டலவியல் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
நாட்டில் மணிக்கு 50 கிலோ மீற்றர் வரையிலான கடும் காற்று வீசக்கூடும். குறிப்பாக தென்மாகாணத்திலும், மாத்தளை – திருகோணமலை -பொலன்னறுவை மாவட்டங்களிலும் காற்றுடன் கூடிய காலநிலை நீடிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
மன்னாரிலிருந்து கொழும்பு , காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்கரை பிரதேசங்களில் காற்றின் வேகம் மணிக்கு 70 கிலோமீற்றருக்கு அதிகரிக்ககூடும் என்று திணைக்களம் அறிவித்துள்ளது. பிற்பகல்வேளையில் ஏனைய மாகாணங்களின் பல பிரதேசங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

Post a Comment

0 Comments