தன்னிடம் வெடி குண்டு இருப்பதாக தெரிவித்து மலேசியன் விமானமொன்றில் விமானியின் அறைக்குள் செல்ல முயற்சித்த இலங்கையர் ஒருவர் அவுஸ்திரெலியாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவுஸ்திரெலியா மெல்போன் நகரிலிருந்து மலேசியா நோக்கி பயணித்த விமானத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது விமான பணியாளர்கள் அந்த நபரை பிடித்து கைகளை கட்டிப்போட்டு விமானத்தை மீண்டும் மெல்போன் நகருக்கு திருப்பி பாதுகாப்பு அதிகாரிகளிடம் அவரை ஒப்படைத்துள்ளனர்.
இந்த சம்பவத்தின் போது குறித்த நபர் மது போதையில் இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. -(3)


0 Comments