2017 ஐசிசி சம்பியன்சிப் கிண்ணத்தை கைப்பற்றியுள்ள பாக்கிஸ்தான் அணிக்கு அதன் முன்னாள் வீரர்கள் பலர் டுவிட்டரில் தங்கள் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்
நீங்கள் எங்களை மகிழ்ச்சியடையச் செய்துள்ளீர்கள் பெருமைப்பட வைத்துள்ளீர்கள் என அணியின் முன்னாள் தலைவர் மிஸ்பா உல் ஹக் தனது டுவிட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்
நீங்கள் எங்களை மகிழ்ச்சியடையச் செய்துள்ளீர்கள் பெருமைப்பட வைத்துள்ளீர்கள் என அணியின் முன்னாள் தலைவர் மிஸ்பா உல் ஹக் தனது டுவிட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்

இந்த இறுதிப்போட்டியில் பாக்கிஸ்தான் விளையாடிய விதத்தை இந்திய பாக்கிஸ்தான் இரசிகர்கள் என்றென்றும் மனதில் வைத்திருப்பார்கள் என அதிரடி துடுப்பாட்ட வீரர் சயீத் அப்ரீடி தெரிவித்துள்ளார்.
ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண தொடரின் முதல் போட்டியி;ல் இந்தியாவுடன் தோற்றதற்காக பாக்கிஸ்தானை கடுமையாக சாடியிருந்த முன்னாள் அணித்தலைவர் இம்ரான் கான் சம்பியன்சிப் கிண்ணத்தை கைப்பற்றியதற்காக பாக்கிஸ்தானை பாராட்டியுள்ளார்
அவர் குறிப்பாக இளம் வீரர் பஹார் ஜமானை பாராட்டியுள்ளார்
அக்ரம் விரேந்திர செவாக் குமார் சங்ககார ஸ்டீவன் ஸ்மித் உட்பட பல வீரர்கள் டுவிட்டரில் தங்கள் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.
0 Comments