சிரியாவின் ரக்கா நகரிற்கு அருகில் சிரிய அரசாங்கத்தின் போர்விமானமொன்றினை அமெரிக்க போர் விமானமொன்று சுட்டு வீழ்த்தியுள்ளது.
அமெரிக்க ஆதரவு படையினர் நிலைகொண்டிருந்த பகுதிக்கு மிக அருகில் குண்டுவீச்சினை மேற்கொண்டதை தொடர்ந்தே சிரியாவின் விமானத்தினை சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அமெரிக்க தலைமையிலான கூட்டு படையணியின் படைகளின் நலன்களை கருத்தில்கொண்டே சிரிய விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.அமெரிக்க ஆதரவு படைகளிற்கு அருகில் குண்டுவீசிய சிரிய விமானம் உடனடியாக சுட்டு வீழ்த்தப்பட்டது என்றும் அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.
விமானத்தை சுட்டு வீழ்த்துவதற்கு முன்னர் ரஸ்யாவுடன் தொடர்புகொண்டதாகவும் தெரிவித்துள்ள அமெரிக்கா தன்னுடைய தலைமையிலான கூட்டணி சிரிய படையினருடனோ அல்லது ரஸ்ய படையினருடனோ மோதலில் ஈடுபடாது ஆனால் தன்னை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என தெரிவித்துள்ளது.
இதேவேளை சிரியா தனது போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவத்தை உறுதிசெய்துள்ளதுடன் அதனை கடுமையாக கண்டித்துள்ளது.
0 Comments