வாழைச்சேனை பொலிஸ் பிரிவின், வாகனேரி பகுதியில் வைத்து சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட பாலைமரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திப்புட்டுமுனுவ தெரிவித்தார்.
சட்ட விரோத மரங்கள் கடத்தப்படுவதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலையடுத்து இன்று அதிகாலை மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போதே குறித்த மரக்குற்றிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
அக்கிரானை காட்டுப்பகுதியில் இருந்து ஓட்டமாவடி பகுதிக்கு விறகு கொண்டு வருவது போல் மறைத்து கொண்டு வரப்பட்ட நிலையிலேயே, எட்டு அடி நீளம் கொண்ட இரண்டு பாலை மரங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மரங்களை ஏற்றி வந்த உழவு இயந்திரமும் கைப்பற்றப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திப்புட்டுமுனுவ இதன்போது தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.




0 Comments