Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

பட்டதாரிகள் போராட்டம் வடக்கு கிழக்குமாகாண பாடசாலைக் கல்வியில் பாரிய பின்னடைவை ஏற்படுத்தும்

பலமாதங்கள் கடந்து நடைபெறும் வேலையில்லாப் பட்டதாரிகளின் போராட்டத்தால்  வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பாடசாலைக் கல்வி பாரிய பின்னடைவைச் சுமக்கப்போகின்றது. ஏற்கனவே கடைசி இடங்களில் உள்ள வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இனிமேலும் பாரிய பின்னடைவைச் சந்திக்குமாக இருந்தால் கல்வியில் மட்டுமல்ல அனைத்து விடயங்களிலும் பின்னோக்கிச் செல்லும். என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
இது தொடர்பில் சங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்…..
பட்டதாரிகளின் போராட்டத்திற்கு உரிய தீர்வு விரைவாக வழங்கப்படவேண்டும். இத்தகைய போராட்டம் நீண்டுசெல்வதால் பாடசாலை மாணவர்களிடையே பல்கலைக்கழகம் செல்லவேண்டும் என்ற உத்வேகம் இல்லாமல் போய் ‘‘நாங்களும் பல்கலைக்கழகம் சென்று படித்துவிட்டு இப்படித்தானே வேலைக்காக வீதியில் படுத்துறங்கவேண்டிவரும்‘‘ என்ற கருத்து பாடசாலை மாணவர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை ஆசிரியர்களிடம் நேரடியாக மாணவர்கள் கூறிவருகின்றனர்.
‘‘பல்கலைக்கழகம் செல்லும் நோக்கை நீங்கள் இலக்காகக் கொள்ள வேண்டும்‘‘ என்ற ஆசிரியர்களின் கருத்துக்கு மாணவர்கள் செவிசாய்க்காது, ‘‘எமது நாட்டில் பல்கலைக்கழகத்தில் படித்து வெளியேறியபின்னர் அடுத்தது என்ன? எம்மை கஸ்டப்பட்டு படிப்பித்த பெற்றோர்களுக்கு நாம் அதன் பின்னரும் சுமையாக இருக்க வேண்டுமா? எமது எதிர்காலம் கேள்விக்குறிதானே? ஆகையால் நாம் படித்துத்தான் என்ன? படிக்காமல் விட்டால்தான் என்ன?‘‘ என்ற கேள்விகளை மாணவர்கள் ஆசிரியர்களிடம் கேட்கின்றனர்.
வளர்ந்த நாடுகளில் பட்டத்தின் பின்னர் அல்லது உயர்கல்வியின் பின்னர் இன்னுமொரு வழிகாட்டல் உள்ளது. அத்தகைய நடைமுறை எமது நாட்டில் இல்லை. பட்டத்தின் பின்னர் தொழிலுக்காக அலையும் நிலை இங்கு உள்ளது. அதிலும் பட்டதாரிகளாகி உரிய தொழில் இல்லாமல் இருப்பதென்பது படித்த கல்வியை பாழாக்கும் செயல் என்றே கருதப்படுகின்றது. ‘‘பட்டதாரியாகி அரச தொழில்தான் வேண்டும் என்று பட்டதாரிகள் கேட்பது முறையல்ல‘‘ என்று பலர் கேட்கின்றனர். அப்படியானால் பட்டத்தின் பின்னர் செய்வதற்கான தொழிலை இதுவரை யாரும் காட்டவில்லை. அத்தகைய நிலை எமது நாட்டில் அறவே இல்லை.
ஆகையால் பட்டதாரிகளின் போராட்டத்தை முடிவுக்குக்குக் கொண்டுவர அனைவரும் விரைந்து செயற்படவேண்டும். என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.   unnamed (1)unnamed (3)unnamed (4)

Post a Comment

0 Comments