பிரிட்டனின் பொதுத்தேர்தல் வாக்களிப்பு இன்று நடைபெறவுள்ள அதேவேளை பிரதமர் தெரேசா மே வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதை வெளிப்படுத்தும் கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளன.
அதேவேளை புதன்கிழமை வெளியான கருத்துக்கணிப்புகள் பிரதமரிற்கும் தொழிற்கட்சியின் தலைவர் ஜெரெமி கோர்பினிற்கும் இடையிலான இடைவெளி குறைவடைந்துள்ளதையும் கருத்துக்கணிப்புகள் வெளிப்படுத்தியுள்ளன
அதேவேளை புதன்கிழமை வெளியான கருத்துக்கணிப்புகள் பிரதமரிற்கும் தொழிற்கட்சியின் தலைவர் ஜெரெமி கோர்பினிற்கும் இடையிலான இடைவெளி குறைவடைந்துள்ளதையும் கருத்துக்கணிப்புகள் வெளிப்படுத்தியுள்ளன

இறுதியாக வெளியாகியுள்ள ஆறு கருத்துக்கணிப்புகளில் இரண்டு கொன்சவேர்ட்டிவ் கட்சியினர் முன்னிலை வகிப்பதையும் இரண்டு கருத்துக்கணிப்புகள் இரு கட்சிகள் மத்தியிலான இடைவெளி குறைவடைவதையும் வெளிப்படுத்தியுள்ளன. ஏனைய இரு கருத்துக்கணிப்பு முடிவுகளும் முன்னைய நிலையில் மாற்றமில்லை என தெரிவித்துள்ளன.
ஐசிம் எனப்படும் நிறுவனம் தனது கருத்துக்கணிப்புகள் மூலம் கொன்சவேர்ட்டிவ் கட்சிக்கு 46 வீத ஆதரவும் தொழில்கட்சிக்கு 34 வீத ஆதரவும் இருப்பது தெரியவந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.இதன் காரணமாக தெரேசா மே 96 பெரும்பான்மை ஆசனங்களை பெறுவார் மார்க்கிரட் தாட்ச்சர் காலத்தி;ன் பின்னர் கொன்சவேர்ட்டிவ்கள் பெற்ற பெரு வெற்றியாக இது அமையும் என குறிப்பிட்டுள்ளது.
இன்டிபென்டன்ட் செய்தித்தாள் தெரேசா மேயின் கட்சிக்கு 44 வீத ஆதரவும் தொழிற்கட்சிக்கு 34 வீத ஆதரவும் காணப்படுவதாக தெரிவித்துள்ளது.
இரு கருத்துக்கணிப்புகளும் சமீபத்தியை லண்டன் தாக்குதலிற்கு பின்னர் எடுக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இளவயதினர் எவ்வளவு வீதத்தில் வாக்களிக்கின்றனர் என்பது இந்த தேர்தல் முடிவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பிரிட்டிஸ் பொதுத்தேர்தலில் இன்று 650 நாடாளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 46. 9மில்லியன் மக்கள் வாக்களிக்கவுள்ளனர்.
2015 பொதுத்தேர்தலை விட இது அதிகம்; என தெரிவித்துள்ள அதிகாரிகள் இரண்டு வருடங்களிற்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கை 46. 4 மில்லியனாக காணப்பட்டது என குறிப்பிட்டுள்ளனர்.


0 Comments