தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலைச் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையை எதிர்வரும் ஜுலை மாதம் 25ஆம் திகதிக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி எம்.வை.எம்.இஸ்ஸதீன் ஒத்திவைத்துள்ளார்.
இந்த வழக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் இன்று (7) புதன்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பான 05 சந்தேக நபர்களும் நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட வேளையில், இந்த வழக்கு விசாரணையை நீதிபதி ஒத்திவைத்துள்ளார்.
கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலைச் சம்பவம் தொடர்பில் கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரும் மாகாண சபை உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளரும், முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான பிரதீப் மாஸ்டர் என அழைக்கப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா, கஜன் மாமா எனப்படும் கனகநாயகம் மற்றும் இராணுவப் புலனாய்வு உத்தியோகஸ்தர் எம்.கலீல் மற்றும் கடந்த மாதம் கைதுசெய்யப்பட்ட வினோத் எனப்படும் வெலிக்கந்தையை சேர்ந்த மதுசங்க ஆகியோர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டு வருகின்றனர்.
இதில் வினோத் எனப்படும் வெலிக்கந்தையை சேர்ந்த மதுசங்க கடந்த மாதம் கைதுசெய்யப்பட்டிருந்தார்.


0 Comments