Home » » அரசியல் வாதிகளுக்கு இருக்க வேண்டிய பண்புகள் எவை

அரசியல் வாதிகளுக்கு இருக்க வேண்டிய பண்புகள் எவை

தற்போது நாட்டில் ஒரு முக்கியமான நிகழ்வு நடைபெற்றுள்ளது.
அதாவது ஏதாவது பிரச்சனைகள் வரும் என்று. ஆனால் புதிதாக தற்போது நியமிக்கப்பட்டுள்ள அமைச்சரவையை மிகவும் சாதுர்யமாகவும் நல்லுரவை பேனும் வகையிலும் எதிர்காலத்தில் இந்த நாட்டை கட்டியெழுப்பும் வகையில் சில விட்டுகொடுப்புடன் இந்த மாற்றங்களை பிரதமர் அவர்களும் ஐனாதிபதி அவர்களும் ஏற்படுத்தி உள்ளார்கள்.
இந்த மாற்றங்கள் எதிர்காலத்தில் இந்த நாட்டின் வளர்ச்சிக்கு உதவ வேண்டும் என நான் வாழ்த்துகின்றேன்.  இந்த அமைச்சரவை நியமனத்தில் குலறுபடிகள் ஏற்பட்டு நல்லாட்ச்சிக்கு பங்கம் ஏற்படும் என நினைத்தவர்களுக்கு இது ஒரு  சாட்டை அடியாகவே இருக்கின்றது. தற்போது இந்த நியமனம் பெற்றவர்களை ஒருசாரார் நிந்தித்து வருகின்றனர். இதை அவருக்கு கொடுத்து இருந்தால் நல்லா செய்வார் இவருக்கு கொடுத்திருந்தால் நல்லா செய்வார் என்று. அவை எல்லாவற்றுக்கும் ஒரு முடிவு கட்டபட்டு புதிய அமைச்சரவை உறுவாகியுள்ளது. அந்த வகையில் இந்த அமைச்சரவை மக்களுக்கு சிறந்த சேவையை வழங்கும். இந்த நாட்டில் ஒருவர்  அரசியல்வாதியாக இருக்க வேண்டுமானால்  சிறந்து அனுபவம்¸ மனித நேயம்¸ துனிவு¸ ஆற்றல்¸ சிறந்த தலைமைத்துவம¸; மக்களுக்கு சேவை செய்யக் கூடிய மனம்¸ மக்களிடம் பழகும் விதம்  என்பன மிகவும் முக்கியமானதாகும்  ஏன்று கூறுகின்றார் கல்வி இராஐhங்க அமைச்சர் வே. இராதாகிருஷ்ணன் அவர்கள்.
கம்பளை ஷாகிரா தேசிய கல்லூரியில் நடைபெற்ற 25வது வருட கொண்டாட்டமும் கல்வி பொது சாதாரண தரம்¸ உயர்தரம்¸ இனைப்பாடவிதான செயற்பாடுகளில் சிறந்த பெறுபேறு பெற்றவர்கள்¸ பல்கலைக்கலகங்களுக்கு தெரிவான மாணவர்களுக்கான கௌரவிப்பும் பரிசில்கள்¸ சான்றிதல் வழங்கும் நிகழ்வு கல்லூரியின் அதிபர் ஏ.எல்.சிராஜ் தலைமையில் நடைபெற்ற பொழுது இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக  கலந்து கொண்டு  அங்கு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார் இந்நிகழ்வில் கம்பளை கல்வி வலய கல்வி அதிகாரிகள்¸ பெற்றோர் ஆசிரிய சங்க உறுப்பினர்கள்¸ பலய மாணவர் சங்க உறுப்பினர்கள் உட்பட பெற்றோர்கள் மாணவர்கள் கலந்து கொண்டார்கள். இதன் பொழுது மாணவர்களின் கலைநிகழ்ச்சிகளும் கல்வி பொது சாதாரண தரம்¸ உயர்தரம்¸ இனைப்பாடவிதான செயற்பாடுகளில் சிறந்த பெறுபேறு பெற்றவர்களுக்கும் பல்கலைக்கலகங்களுக்கு தெரிவான மாணவர்களுக்கும் கௌரவிப்பும் பரிசில்கள் உட்பட சான்றிதல்கள் வழங்கபட்டன. இதில் இந்த பாடசாலையின் பழைய மாணவர்கள் பாராட்டுக்கு உரியவர்கள். பல்கலைக்கலகங்களுக்கு தெரிவான மாணவர்களுக்கு இவர்களினால் மடிக்கணணிகள் வழங்கி வைக்கபட்டன.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அமைச்சர் அவர்கள் ஒருவர் பல்கலைகழகத்திற்கு சென்றால் கல்வி தகைமையே முக்கியம் ஆனால் அரசியலுக்கு வந்தால் தகைமையுடன் நான் மேற்படி கூறிய விடயங்கள் முக்கியம்.  இதற்கு உதாரணமாக முன்னால் ஐனாதிபதி ரனசிங்க பிரேமதாசாவை அவர்களை கூற முடியும். அவர் சாதாரண ஒரு பரம்பரயை சேர்ந்தவர் ஒரு படித்த பட்டதாரியும் அல்ல. ஆனால் அவரின் சேவை¸ ஏழை மக்களுக்காக அர்ப்பனித்த அர்ப்பனிப்பு¸ சிறந்த தலமைத்துவம்¸; மக்களுக்கு செய்த வேலைகள் இன்னும் மக்களின் மனங்களில் வாழ்ந்து கொண்டு இருக்கின்றார். இவர் ஒரு படிபாலியும் மேததையும் அல்ல சிறந்த பண்புகளே இன்னும் இவர் மக்கள் மனங்களில் வாழ காரணமாக இருக்கின்றது. இவ்வாரான வழியில் இந்த புதிய  அமச்சரவை நியமனம் பெற்ற அமைச்சர்கள் மக்களுக்காக சேவை செய்து மக்கள் மனங்களில் இடம் பிடிக்க வேண்டும். மக்களுக்காக சேவை செய்ய வேண்டும் என கூறினார். srdgdunnamed (1)unnamed (2)unnamed (3)
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |