வவுனியா நெளுக்குளத்தில் இன்று (15) காலை 9.30 மணியளவில் தூக்கில் தொங்கிய நிலையில் இளம் குடும்ப பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
வவுனியா, நெளுக்குளம், புதையல்பிட்டியில் வசித்துவரும் ஆறு மாத கைக்குழந்தையின் தாய் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சுதன் வாணி (வயது 24) என்ற இளம் குடும்ப பெண்ணே இவ்வாறு தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
நேற்றைய தினம் இவரது சொந்த இடமான கிளிநொச்சியில் உள்ள அவரது வீட்டுக்கு காலை சென்று மீண்டும் மாலை வீடு திரும்பியுள்ளார். இன்று காலை எழுந்து வீட்டு வேலைகள் எல்லாம் முடித்து மாமனாருக்கு காலை உணவு செய்து அவருக்கு வழங்கியுள்ளார். மாமனார் கூலி வேலைக்கு சென்றுள்ளார்.
கணவன் கடைக்கு பொருட்கள் வாங்க சென்று வீட்டுக்கு திரும்பி வந்த போது ஆறு மாதக் கைக்குழந்தை தொட்டிலில் இருந்து அழுது கொண்டிருந்தது. குறித்த பெண்ணின் கணவர் குழந்தையை தூக்கி கொண்டு தாயை தேடிய போது தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார்.
இவரின் மரணத்திற்கான காரணம் என்ன? என நெளுக்குள பொலிஸார், வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
0 comments: