முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் ஐந்தாம் நாள் நிகழ்வு நாளை செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பில் நடைபெறவுள்ளதாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.இறுதி யுத்ததின்போது முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட உறவுகளை நினைவுகூர்ந்து இந்த நிகழ்வு வடக்கில் நடாத்தப்பட்டுவருவதுடன் கிழக்கு மாகாணத்திலும் அதனை நடாத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதன்கீழ் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் நினைவேந்தல் வாரத்தின் ஐந்தாம் நாள் நிகழ்வு கல்லடி கடற்கரையில் நடாத்தப்படவுள்ளதாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.
நாளை செவ்வாய்க்கிழமை மாலை 5.00மணிக்கு கல்லடி கடற்கரையில் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெறவுள்ளதாகவும் இந்த நிகழ்வு வடமாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கத்தின் தலைமையில் நடைபெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இறுதி யுத்தத்தின்போது உயிரிழந்த அனைவரையும் நினைவுகூரும் இந்த நிகழ்வில் கட்சி பேதங்களுக்கு அப்பால் அனைவரையும் வருகைதந்து நினைவுகூரலில் பங்கேற்குமாறும் மாகாணசபை உறுப்பினர் அழைப்பு விடுத்துள்ளார்.
0 comments: