மூன்றாம் உலகப் போர் பதற்றம் வலுவடைந்து வரும் நிலையில், பேரழிவை ஏற்படுத்தக் கூடிய electromagnetic pulse தாக்குதல் குறித்த அறிவியல் புனைக்கதைகளால் அச்சம் ஏற்பட்டுள்ளது.
வடகொரியா விண்வெளியில் இவ்வாறான உயர் அணு ஆயுதம் ஒன்றை வெடிக்க வைக்கலாம் என சிலர் கருதுகின்றனர். அப்படியான நிலை ஏற்பட்டால் அதனை எவ்வாறு சமாளிப்பது என்பது தொடர்பில் வல்லுநர்கள் அவதானம் செலுத்தியுள்ளனர்.
அமெரிக்கா மற்றும் வடகொரியாவிற்கு இடையிலான பனிப்போர் வலுப்பெற்றுள்ள நிலையில், கொரிய தீபகற்பத்தில் பெரும் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
வல்லரசு நாடுகளின் முக்கிய பாதுகாப்பு கருவியாக செய்மதிகள் (Satellites) காணப்படுகின்றன. குறிப்பாக அமெரிக்காவின் ஏவுகணைகள் செய்மதிகளின் (Satellites) உதவியின்றி செலுத்த முடியாது என தெரிவிக்கப்படுகின்றது.
உளவு செய்மதிகளின் (Spy satellite) செயற்பாடு நின்று போனால் அந்த நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிடும். அந்த வகையில் குறித்த விடயத்தில் வடகொரிய ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
எனினும், இதனை அமெரிக்க விஞ்ஞானிகள் மற்றும் வல்லுநர்கள் மறுத்துள்ளனர் இது குறித்து அணுசக்தி பரவலாக்கல் நிபுணர் ஜெஃப்ரி லூயிஸ் கருத்து தெரிவிக்கையில்,
”கடந்த காலத்தில் இத்தகைய சாதனங்களின் சோதனைகள் பெரும்பாலும் மின்சார சிதைவை உற்பத்தி செய்யத் தவறிவிட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
வட கொரியாவிடம் அணு ஆயுதங்கள் இருக்கலாம். அவற்றை விண்ணுக்கு செலுத்தி வெடிக்கச் செய்யவும் முடியும். எனினும், அதில் இருந்து வெளியேறும் electromagnetic pulse தமது செய்மதிகள் (Satellites) பாதிக்காது" எனவும் குறிப்பிட்டுள்ளார்.
0 comments: