மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 2014ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புனர்வாழ்வு அமைச்சினால் வழங்கப்பட்ட வெள்ள நிவாரண நிதியை கையாள்வதில் நடைபெற்ற ஊழல்கள் தொடர்பான விசாரணைகளை இலங்கை இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு ஆரம்பித்துள்ளது.
இதன் முதல்கட்டமாக அமைச்சின் அதிகாரிகள் ஆணைக்குழுவின் முன் விசாரணைக்கு ஆவணங்களுடன் அழைக்கப்பட்டிருந்த நிலையில் இன்றைய தினம்(24.05.2017) மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள காத்தான்குடி, ஏறாவூர் நகர், ஆரையம்பதி, வவுணதீவு,வாழைச்சேனை, ஓட்டமாவடி மற்றும் வாகரை உள்ளிட்ட பிரதேச செயலக கணக்காளர்களை வெள்ள நிவாரணம் வழங்கப்பட்ட ஆவணங்களுடன் கொழும்பு இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு; சமுகமளிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
2014 ஆண்டு வெள்ள நிவாரண ஊழல் குறித்த பின்னனி!
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 2014ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புனர்வாழ்வு அமைச்சினால் வழங்கப்பட்ட நிதியில் ஊழல் நடைபெற்றுள்ளது நிதி முறைகேடுகள் நடைபெற்றுள்ளது. தேர்தல்மோசடி நடைபெற்றுள்ளது கச்சேரி வாகனங்கள் முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளது அரச உத்தியோகத்தர்கள் அரச வளங்கள் மகிந்தராஜபக்சவின் தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தப்பட்டமை மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியான அரசாங்க அதிபர் கட்சி வேட்பாளர் ஒருவருக்காக பனியாற்றியமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்கள் ஏற்கனவே முன்வைக்கப்பட்டிருந்த நிலையில் அவை பொய்யான குற்றச்சாட்டுக்கள் என மாவட்ட அரச நிர்வாகம் நிராகரித்திருந்த நிலையில் அது குறித்த விசாரணைகளை இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் நல்லாட்சி அரசு ஆரம்பித்துள்ளது.
அரசியல் பிரச்சாரத்திற்கு வெள்ள நிவாரணம் பயன்படுத்தப்பட்டதா?
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 2014ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புனர்வாழ்வு அமைச்சினால் வழங்கப்பட்ட நிதியை அரச நிர்வாக நடைமுறைகளுக்கு மாறாக தவறான முறையில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தது. குறிப்பாக நிதி முறைகேடல் இடம்பெற்றுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 2014ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புனர்வாழ்வு அமைச்சினால் வழங்கப்பட்ட நிதியை அரச நிர்வாக நடைமுறைகளுக்கு மாறாக தவறான முறையில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தது. குறிப்பாக நிதி முறைகேடல் இடம்பெற்றுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.
குறித்;த நிதி அப்போது நடைபெற்ற தேர்தலுக்கான பிரச்சாரத்திற்காக பயன்படுத்தப்பட்டுள்ளது என குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக முன்னால் ஜனாதிபதியின் தேர்தல் வெற்றிக்காக குறித்த நிதி பாவிக்கப்பட்டுள்ளது. என குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
தேர்தல் மேசடி!
2015ம் ஆண்டு ஜனவரி 8ம் திகதி இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் குறித்த அறிவிப்புக்கள் 2014 ஆண்டின் இறுதிப்பகுதியில் வெளியாகியிருந்த நிலையில் மட்டக்களப்பு மாவட்டம் பாரிய வெள்ள அனர்த்தத்திற்கு முகம் கொடுத்திருந்தது.
அப்போது அனைத்து கட்சிகளும் தங்களது தலைமைகளை வெற்றியடைய வைக்கவேண்டும் என்ற பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தாலும் நாடு மகிந்தராஜபக்சவின் முழுமையான கட்டுப்பாட்டில் இருந்தது மகிந்தராஜபக்சவை வெற்றியடைய வைக்கவேண்டும் என்பதற்காக மட்டக்களப்பில் இருந்த கருணா பிள்ளையான் ஹிஸ்புல்லா போன்றவர்கள் மிகத்தீவிரமாக செயற்பட்டிருந்தனர்.
மட்டக்களப்பு மாவட்டம் அப்போது முழுமையாக இவர்களின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது.
மட்டக்களப்பு மாவட்டம் அப்போது முழுமையாக இவர்களின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது.
மீண்டும் இலங்கையின் ஜனாதிபதியாக மகிந்தராஜபக்சவே வருவார் என்ற நம்பிக்கையின் நிமிர்த்தம் அன்று ஏற்பட்ட வெள்ள நிவாரணப் பணிகளை மட்டக்களப்பின் அரச நிர்வாகம் முழுமையாக மகிந்தராஜபக்சவின் பிரச்சாரத்திற்காக பயன்படுத்தியது.
குறிப்பாக மட்டக்களப்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக உடனடியாக நிறுவனங்கள் மற்றும் அரச நிதியில்; வழங்கப்பட்ட பாய் படுக்கைவிரிப்பு துடைப்பான் போன்ற நிவாரணப் பொருட்கள் பிரதேச செயலாளர்களுக்கு வழங்கப்படாமல் நேரடியாக கச்சேரியில் இருந்து கருணா பிள்ளையான் ஹிஸ்புல்லா பேன்றவர்களுக்கு வழங்கப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அத்துடன் பாய் படுக்கைவிரிப்பு துடைப்பான் போன்ற பல நிவாரணப் பொருட்களை பிள்ளையானின் கட்சி அலுவலக திறப்புவிழாவிற்கும் ஹிஸ்புல்லாவின் அரசியல் பிரச்சாரத்திற்கும் கச்சேரி நிர்வாகம் நேரடியாக பிரச்சார மேடைகளுக்கே கொண்டு சென்று வழங்கியுள்ளதாகவும் அதற்கான ஆதாரங்களாக அன்றைய நாட்களில் ஊடகங்களில் வெளிவந்த செய்திகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெற்ற மிகப்பெரிய தேர்தல் மோசடியாகும் என தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெற்ற மிகப்பெரிய தேர்தல் மோசடியாகும் என தெரிவிக்கப்படுகின்றது.
மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியின் மோசடிகள்!
குறித்த சம்பவங்களின் ஊடாக மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியாக செயற்பட்ட மாவட்ட அரசாங்க அதிபர் தேர்தல் விதிமுறைகளை மீறி ஒரு கட்சியின் வெற்றிக்காக தான் செயற்பட்டதுடன் தனக்கு கீழ் வழங்கப்பட்ட நிதி அரச வளங்கள் அனைத்தையும் குறித்த அரசியல் கட்சியின் வெற்றிக்காக பயன்படுத்தியுள்ளமை தெரியவந்துள்ளது.
அத்தோடு மட்டக்களப்பில் நடைபெற்ற தேர்தல் நடவடிக்கைகள் அனைத்தும் அப்போது பக்கச்சார்பாகவே நடைபெற்றதாகவும் அதனால் தேர்தல் முடிவுகள் அனைத்தும் உண்மையாக இருக்க வாய்ப்பில்லை என்ற குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்பட்டுள்ளது.
இதற்காக குறித்த அரசாங்க அதிபருக்கு முன்னால் ஜனாதிபதி மகிந்தராஜபக்சவால் பல சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
எனவே இது குறித்த விசாரணைகள் முறையாக நடைபெற்று அதற்கான தக்க தண்டனை வழங்கப்படாவிட்டால் இனிவரும் காலங்களில் நடைபெறவுள்ள தேர்தல்களிலும் இதுபோன்ற மோசடிகள் இடம்பெற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனவே இது குறித்த விசாரணைகள் முறையாக நடைபெற்று அதற்கான தக்க தண்டனை வழங்கப்படாவிட்டால் இனிவரும் காலங்களில் நடைபெறவுள்ள தேர்தல்களிலும் இதுபோன்ற மோசடிகள் இடம்பெற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
புதிய ஜனாதிபதியால் அதிர்ந்துபோன கச்சேரி!
2015ம் ஆண்டு ஜனவரி மாதம் இலங்கையின் புதிய ஜனாதிபதியாக மைத்திரிபால சிரிசேன அவர்கள் தெரிவுசெய்யப்பட்டார். இதனை சற்றும் எதிர்பாராத கச்சேரி நிர்வாகம் ஆட்சிமாற்றத்தினால் தடுமாறிப் போயிருந்தது.
காரணம் மீண்டும் மகிந்தராஜபச்சவே ஜனாதிபதியாக வருவார் என்ற நம்பிக்கையில் தேர்தலுக்கு முன்னர் இடம்பெற்ற வெள்ள நிவாரணப் பணிகள் முறையாக பிரதேச செயலாளர்களுக்கு ஊடாக மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படவில்லை மாறாக அவை அனைத்தும் அரசியல் வாதிகளிடமே ஒப்படைக்கப்பட்டிருந்ததுடன் அது மகிந்தவின் அரசியல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தப்பட்டிருந்தன இதனால் உடனடியாக இதனை சரிசெய்வதற்கான நடவடிக்கைகளில் கச்சேரி நிர்வாகம் இறங்கியது.
காரணம் மீண்டும் மகிந்தராஜபச்சவே ஜனாதிபதியாக வருவார் என்ற நம்பிக்கையில் தேர்தலுக்கு முன்னர் இடம்பெற்ற வெள்ள நிவாரணப் பணிகள் முறையாக பிரதேச செயலாளர்களுக்கு ஊடாக மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படவில்லை மாறாக அவை அனைத்தும் அரசியல் வாதிகளிடமே ஒப்படைக்கப்பட்டிருந்ததுடன் அது மகிந்தவின் அரசியல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தப்பட்டிருந்தன இதனால் உடனடியாக இதனை சரிசெய்வதற்கான நடவடிக்கைகளில் கச்சேரி நிர்வாகம் இறங்கியது.
அரசியல்வாதிகளிடம் வழங்கப்பட்ட நிவாரணத்திற்கு பிரதேச செயலாளர்களிடம் விபரம் கேட்ட கச்சேரி மட்டக்களப்பு கச்சேரியில் மாவட்டத்தில் உள்ள அனைத்து பிரதேச செயலாளர்களையும் அழைத்து வெள்ளநிவாரணம் அரசியல்வாதிகளின் ஊடாக உங்களது பிரதேசங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
இதற்கான பெயர்விபரங்களை பிரதேச செயலாளர்கள் தயாரித்து தரும்படி அரசாங்க அதிபர் கோரிக்கை விடுக்க அதற்கு பல பிரதேச செயலாளர்கள் மறுத்துள்ளனர். தங்களுக்கும் அந்த நிவாரணப்பொருட்கள் பகிர்ந்தளிக்கப்பட்டதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை அது எமக்கு தெரியாமல் நடைபெற்றதால் எங்களால் இதற்கான விபரங்களை தரமுடியாது என பிரதேச செயலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன் பின்னர் அரசியல்வாதிகளிடம் கச்சேரியால் வழங்கப்பட்ட பொருள் விபரங்களை குறிப்பிட்டு அனுப்புமாறு அரசாங்க அதிபரினால் பிரதேச செயலாளர்களுக்கு கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளது.
பிரதேச செயலாளர்களிடம் கெஞ்சித் திரிந்த வர்த்தகர்!
வெள்ள நிவாரணத்திற்கு வழங்கப்பட்ட நிதியின் அரைவாசியை உடனடியாக அரசியல் வாதிகளிடம் வழங்கப்பட்ட நிவாரணப்பொருட்களுக்காக கச்சேரி நிர்வாகம் வழங்கியதால் 2014ம் ஆண்டுக்கான வெள்ள நிவாரணப் பொருட்களை கச்சேரிக்கு வழங்கிய முஸ்லீம் வர்த்தகர் ஒருவருக்கு பணத்தினை வழங்கமுடியாத சூழ்நிலை கச்சேரிக்கு அப்போது ஏற்பட்டுள்ளது. அரசியல் வாதிகளிடம் நேரடியாக வழங்கப்பட்ட உலர் உணவுப் பொருட்களுக்கான பணத்தினை வழங்குவதாக இருந்தால் யாருக்கு வழங்கப்பட்டது எவ்வளவு வழங்கப்பட்டது என்ற விபரங்களை பிரதேச செயலாளர்கள் கச்சேரிக்கு வழங்கவேண்டும். ஆனால் அதனை வழங்க பல பிரதேச செயலாளர்கள் மறுத்ததனால்.
எப்படியாவது நிவாரணம் வழங்கப்பட்டவர்களின் பெயர்விபரங்களை தயாரித்து வேண்டிவருமாறும் அப்போதுதான் உங்களுக்கான பணத்திணை தரமுடியும் என்று கச்சேரி நிர்வாகம் கூறியுள்ளது.
இதனால் நிவாரணப் பொருட்களை வழங்கிய குறித்த முஸ்லீம் வர்த்தகர் பிரதேச செயலகங்களில் காத்துக்கிடந்ததுடன் பிரதேச செயலாளர்களிடம் கெஞ்சித்திரிந்துள்ளார்.
பின்னர் அரசியல் தலைவர்களின் பல அழுத்தங்களுக்கு பிறகு பிரதேச செயலகங்களில் உள்ள சமூர்த்தி பிரிவுகளின் ஊடாகவும் கிராமசேவையாளர்கள் ஊடாகவும் அரசியல் வாதிகளுக்கு வழங்கப்பட்ட நிவாரணங்களுக்கான பெயர்விபரங்கள் தயாரித்து வழங்கப்பட்டு குறித்த முஸ்லீம் வர்த்தகருக்கான பணம் வழங்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படகின்றது.
அரசியல் தலையீட்டால் செலவு செய்யமுடியாமல் போன 20 226 011 ரூபா நிதி
2014 மற்றும் 2015 ஜனவரிமாதம் வரை மட்டக்களப்பில் வெள்ளத்தினால் பலர் பாதிக்கப்பட்டிருந்தும் அவர்களுக்கான அத்தியாவசிய பொருட்கள் மற்றும் உலர் உணவு பொருட்கள் வழங்குவதற்கான நிதி பொதுமானதாக இல்லை என்று கூறப்பட்டிருந்தது. அத்தோடு அப்போது பாதிக்கப்பட்ட பல பிரதேசங்களுக்கான உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்படாத நிலையில் கச்சேரிக்கு அனுப்பப்பட்ட 70 000 000 ரூபா நிதியில் 20 226 011.14 திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.
கச்சேரியின் அனர்த்த முகாமைத்துவ பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள மேற்படி கணக்கறிக்கையில் 226 011.14 திருப்பி அனுப்பப்பட்டதற்கான காரணம் குறிப்பிடப்படவில்லை.
குறித்த நிதி மகிந்தராஜபக்ச ஜனாதிபதியாக மீண்டும் தெரிவாகியிருந்தால் அரசியல்வாதிகளின் வெற்றிக்கொண்டாட்டங்களுக்கும் அவர்களது ஆதரவாளர்களை திருப்திப்படுத்துவதற்காகவும் சேமித்துவைக்கப்பட்டிருந்ததாகவும் ஆட்சி மாறியதன் காரணமாக அதனை திருப்பி அனுப்பவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதாகவும் சம்பந்தப்பட்டவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
எனவே மேற்குறித்த வெள்ள நிவாரணம் அரசியல்வாதிகளின் தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தப்படவில்லை என்பதை அரச அதிபர் நிரூபிப்பாரா? என்பதை பொறுத்திருந்ததான் பார்க்கவேண்டும்.
விசாரணை செய்யப்படவேண்டியவர்கள்!
இது குறித்து மாவட்டத்தில் உள்ள கச்சேரி வாகனங்களுக்கான சாரதிகள் உட்பட மாவட்ட செயலகத்தில் உள்ள அதிகாரிகள் பிரதேச செயலாளர்கள் மாவட்ட கணக்காளர்கள் கிராமசேவையாளர்கள் உட்பட அப்போதைய காலப்பகுதியில் மாவட்ட செயலகத்திற்கும் பிரதேச செயலகத்திற்கும் இடையே பரிமாறப்பட்ட ஆவணங்கள் முறையாக பரிசிலனைக்கு உட்படுத்தப்பட்டு விசாரணைகள் செய்யப்பட்டால் இது குறித்த உண்மைகளை இலஞ்ச ஊழல் ஆனைக்குழு விரைவாக கண்டுபிடிக்க முடியும் என மாவட்டத்தின் முக்கியஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெற்ற பல ஊழல் மேசடிகள் குறித்து இது வரை நல்லாட்சி அரசாங்கம் கவனம் செலுத்தாத நிலையில் நல்லாட்சி அரசு ஊழல்வாதிகளை காப்பாற்றுகிறது என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட நிலையில் இன்றைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை சிறு நம்பிக்கையை மக்கள் மத்தியில் உண்டாக்கியுள்ளது எனலாம்.
0 comments: