நாடளாவிய ரீதியில் இன்று புதன்கிழமை மேற்கொள்ளப்படவிருந்த இலங்கை ரயில் சாரதிகள் சங்கத்தின் வேலைநிறுத்தம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டிருப்பதாக அச்சங்கத்தின் செயலாளர் இந்திக்க தொடங்கொட தெரிவித்துள்ளார்.
தங்களது கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படுமென இலங்கை ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் அளித்த எழுத்துமூல வாக்குறுதியின் அடிப்படையில் வேலைநிறுத்தம் தற்காலிகமாக கைவிடப்பட்டிருப்பதாக அவர் கூறியுள்ளார்.
ரயில் உப சாரதிகளுக்கு பிரதம சாரதிகளின் பொறுப்புகள் சிலவற்றை போக்குவரத்து அமைச்சு ஒப்படைத்தமைக்கு ஆட்சேபம் தெரிவித்தும், மேலும் பல கோரிக்கைகளை முன்வைத்தும் தாங்கள் நடத்தவிருந்த 24 மணித்தியால அடையாள வேலைநிறுத்தம் ரயில்வே பொது முகாமையாளரின் எழுத்துமூல உறுதிமொழியையடுத்து கைவிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் அவரது உறுதிமொழி குறிப்பிட்ட காலத்துக்குள் நிறைவேற்றப்படாவிட்டால் மேலதிக அறிவித்தல்கள் எதுவுமின்றி மீண்டும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவேண்டி வரும் எனவும் இந்திக்க தொடங்கொட எச்சரிக்கை விடுத்துள்ளார்.
0 comments: