உலகின் மிகப்பெரிய நட்சத்திர ஆமை இலங்கையின் தேசிய பூங்கா ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் உலகில் இவ்வளவு பெரிய ஆமை நேரடியாக கண்டுபிடிக்கப்படவில்லை என வனவிலங்கு கால்நடை வைத்திய சங்கத்தின் தலைவர் கால் நடை வைத்தியர் விஜித பெரேரா தெரிவித்துள்ளார். கடந்த 30ஆம் திகதி பூங்காவில் கண்காணிப்பில் ஈடுப்பட்டிருந்த காவலர் இந்த ஆமையை அடையாளம் கண்டுள்ளார்.
|
நேற்று கால்நடை வைத்தியர் விஜித பெரேரா உட்பட ஆய்வாளர்கள் குழுவினால் இந்த ஆமை கண்காணிக்கப்பட்ட பின்னர் ஆமையின் நிறை 14 கிலோ கிராம் எனவும், கீழ் பகுதி (carapace ) 45 செ.மீற்றர் எனவும், ஆமையின் மேல் ஓடு 22 செ.மீற்றர் எனவும், நீளம் 42 செ. மீற்றர் எனவும் தெரியவந்துள்ளது. நட்சத்திர ஆமை இந்தியா, பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய மூன்று நாடுகளிலேயே உள்ளன. இந்த ஆமையின் நிறை மற்றும் அளவு ஆகியவைகளின் தகவல்களின் அடிப்படையில், இதற்கு முன்னர் இருந்த மிகப்பெரிய ஆமைகளை விடவும் இந்த ஆமை இரண்டு மடங்கு பெரியதாகும். இந்த ஆமை விசேட விலங்காக கருதப்படுகின்றது. இது தொடர்பில் மேலதிக தகவல்களை ஆராய்ந்து பார்க்க வேண்டும். எனினும் ஆராய்ந்து பார்த்த அளவிற்கு உலக சாதனையாக பதிவாக கூடும் என கால் நடை வைத்தியர் விஜித பெரேரா தெரிவித்துள்ளார்.
![]() |
0 Comments