Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

உலகின் முதலாவது லேசர் தொழிநுட்பத்துடன் கூடிய வெசாக் பந்தல் கொழும்பில்

உலகின் முதலாவது நவீன லேசர் தொழில்நுட்பத்துடன் கூடிய வெசாக் அலங்கார பந்தல் கொழும்பு காலி முகத்திடலில் அமைக்கப்படவுள்ளது.
எதிர்வரும் 10ஆம் ததிகதி மக்கள் பார்வைக்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இந்த பந்தல் திறந்து வைக்கப்படும். புதன் கிழமை மாலை 7.00 மணிக்கு முதன் முறையாக காட்சிபடுத்தப்படும். துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சர் அர்ஜூன ரணதுங்கவின் வழிக்காட்டலிற்கமைவாக நிர்மாணிக்கப்படுகின்ற இந்நவீன வெசாக் பந்தல் எதிர்வரும் 14ம் திகதி வரையில் மக்கள் பார்வைக்காக திறந்துவைக்கப்படும். கொலந்தொட்ட வெசாக் வலயத்திற்கு இணையாகவே இந்நவீன இவ்வெசாக் அலங்கார பந்தல் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சு இலங்கை , துறைமுக அதிகாரசபை மற்றும் துறைமுக பௌத்த சங்கம் ஆகிய ஒன்றினைந்தே கொலந்தொட்ட வெசாக் வலயத்தை நான்காம் தடவையாக ஏற்பாடுச் செய்துள்ளது. கொழும்பு காலிமுகதிடல் மற்றும் துறைமுக வளாகத்தை மையமாகக் கொண்டு இவ்வலயம் அமைக்கப்படவுள்ளது. காலிமுகதிடலில் நிர்மாணிக்கப்படுகின்ற உலகின் முதலாவது நவீன லேசர் தொழில்நுட்பத்துடன் கூடிய வெசாக் அலங்காரபந்தல் முக்கிய இடத்தை வகிக்கின்றது. இதன் உயரம் 60 அடிகளாகும். அகலம் 40 அடிகளாகும். புத்தரின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கின்ற கதாபாத்திரங்கள் இவ்லேசர் கீற்று வெசாக் அலங்கார பந்தலில் காட்சிப்படுத்தப்படும். 

Post a Comment

0 Comments