வெசாக் தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளது.
அதற்கமைய விசேட போக்குவரத்து திட்டங்களும் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் பிரியந்த ஜெயகொடி குறிப்பிட்டுள்ளார்.
வெசாக் பண்டிகை தினங்களின் போது மோதல்கள் மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை கைது செய்வதற்கான விசேட நடவடிக்கைளும் முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.
அமைதியாகவும் பாதுகாப்பான வகையிலும் மத வழிப்பாடுகளில் பொது மக்கள் ஈடுபடும் வகையில் பொலிஸ் மாஅதிபரின் பணிப்புரைக்கு அமைய விசேட பாதுகாப்புத் திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.
அதற்கமைய இந்த விசேட ஏற்பாடுகள் குறித்து நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களுக்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
சிவில் மற்றும் சீருடைகளில் பொலிஸார் கடமைகளில் ஈடுபடவுள்ளதாகவும் கொழும்பு நகரில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் பிரியந்த ஜெயகொடி சுட்டிக்காட்டியுள்ளார்.
0 Comments