தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான இரா.சம்பந்தனை இந்திய பிரதமர் நரேந்திர மோடி வெகுவாக பாராட்டி மெச்சியுள்ளார்.
தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான சந்திப்பு கடந்த வெள்ளிக்கிழமை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் விசேட பிரமுகர்களுக்கான பகுதியில் இடம்பெற்றது.
இதன்போது இருதரப்பு கலந்துரையாடலின் போது இந்திய பிரதமர் நரேந்திர மோடி,’ நீங்கள் (சம்பந்தன்) மிகவும் பொறுமைசாலி, அமைதியாக விடயங்களை கையாளுகின்றீர்கள், தமிழ் மக்களுக்கு கிடைத்த அதி உன்னத தலைவராக இருக்கின்றீர்கள், உங்களுடைய பொறுமையை நாம் வெகுவாக பாராட்டுகின்றோம்.
உங்களுடைய அனுபவ ரீதியான அணுகுமுறைகளையும் பாராட்டுகின்றோம். உங்களுடைய உடல் நலத்தை பாதுகாத்துக் கொள்ளுங்கள், தமிழ் மக்களின் அனைத்து விடயங்களையும் கையாளக்கூடிய ஒரு தலைவர் நீங்களே.நாங்கள் என்றும் உங்களுடன் இருப்போம்’ என்று எதிர்கட்சி தலைவரை பார்த்து கூறியுள்ளார்.
0 comments: