உத்தேச அரசியல் யாப்பில் அதிகாரம் பகிரப்படும் விதம் குறித்து தெளிவுபடுத்துமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு இலங்கை அரசாங்கத்தைக் கோரியுள்ளது.
ஜூன் மாதம் 06 ஆம் திகதி நடைபெறவுள்ள அவ்வாணைக்குழுவின் 35 ஆவது கூட்டத் தொடரில் இது தொடர்பான அறிக்கையை இலங்கை அரசாங்கம் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் ஐ.நா. குறிப்பிட்டுள்ளது.
ஐக்கிய நாடுகளின் விசேட பிரதிநிதி ஜுவன் மென்டஸின் 9 நாள் இலங்கை விஜயத்தின் பின்னர் விசேட அறிக்கையொன்றை சமர்ப்பித்துள்ளார்.
அதில் அரசியலமைப்பு சபைக்கு அரச சார்பற்ற அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்வாங்கப்பட வேண்டும் எனவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அத்துடன், 49 பரிந்துரைகளை அவ்வறிக்கை முன்வைத்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
0 comments: