கிழக்கு மாகாணத்திற்கு இன்று விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் திருகோணமலை மாவட்டத்தின் வெருகல் பிரதேசத்தில் பாலம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்விற்கு வருகைதந்த ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினரை வெருகல் பிரதேச செயலாளர் எம்.தயாபரன் வரவேற்றார்.
மேலும் இந்த நிகழ்வுகளின் போது எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்மந்தன், அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல, அமைச்சர் டிலான் பெரேரா, கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்ரின் பெர்ணாண்டோ, கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட், கிழக்கு மாகாண அமைச்சர்களான துரைரட்ணசிங்கம், ஆரியவதி கலபதி ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 Comments