Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

கல்குடா மதுபான உற்பத்தி நிலைய விவகாரம் – மட்டக்களப்பில் பொதுநிகழ்வில் இரு தமிழ் அரசியல்வாதிகளிடையே வாதப்பிரதிவாதம்

மட்டக்களப்பில் இன்று காலை நடைபெற்ற போதையொழிப்பு தொடர்பான நிகழ்வின்போது கல்குடா மதுபானசாலை தொடர்பில் இரு தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசியல்வாதிகளிடையே வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றன.ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் போதையிலிருந்து விடுதலைபெற்ற சகவாழ்வுடன் கூடிய நாட்டினை கட்டியெழுப்புதல் என்னும் கருப்பொருளின் கீழான போதையொழிப்பு விழிப்புணர்வு நிகழ்வு இன்று சனிக்கிழமை காலை மட்டக்களப்பில் நடைபெற்றது.
கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சின் அனுசரணையுடன் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தினால் இளைஞர்களே போதைக்கு எதிராக சவால் விடுக்க வாருங்கள் என்னும் தலைப்பில் இந்த நிகழ்வு நடாத்தப்பட்டது.
இலங்கையில் போதைப்பொருளினால் பாதிக்கப்பட்ட இரண்டாவது மாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் இருந்துவருகையில் இந்த விசேட நிகழ்வு நடாத்தப்பட்டுவருகின்றது.
இதன்கீழ் மட்டக்களப்பு மகாஜனக்கல்லூரி முன்பாக இருந்து பாடசாலை மாணவர்கள் கலந்துகொண்ட இளைஞர்களே போதைக்கு எதிராக சவால் விடுக்க வாருங்கள் என்ற பதாகைகளை தாங்கியவாறு மாபெரும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
மட்டக்களப்பு மத்திய கல்லூரி வரையில் சுமார் ஒரு கிலோமீற்றர் தூரம் இந்த பேரணி நடைபெற்றதுடன் இந்த பேரணியில் பாடசாலை மாணவர்கள்,அரசியல் தலைவர்கள்,அரச அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
அதனைத்தொடர்ந்து மட்டக்களப்பு மத்திய கல்லூரி வில்லியம் ஓல்ட் மண்டபத்தில் விசேட நிகழ்வு நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்அலி பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
சிறப்பு அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், எஸ்.வியாழேந்திரன், கிழக்கு மாகாணசபையின் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார்,கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரம்,ஞா.கிருஸ்ணபிள்ளை,மா.நடராஜா,இரா.துரைரெட்னம் உட்பட உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
இதன்போது போதைப்பொருள் பாவனையினால் சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகள்,மாவட்ட மட்டத்தில் எதிர்நோக்கப்படும் பிரச்சினைகள் உட்பட பல்வேறு கருத்துப்பகிர்வுகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வில் உரையாற்றிய கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் பொது மேடைகளில் பாராளுமன்ற உறுப்பினர் யோஸே;வரன் ஐயா கல்குடா மதுபான உற்பத்தி நிலையத்திற்கு தான் ஆதரவு தெரிவித்துவருவதாகவும் அவ்வாறான கருத்துகளை நிறுத்தவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
இதனைத்தொடர்ந்து கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன்,அண்மையில் மட்டக்களப்பில் நடந்த கலந்துரையாடல் ஒன்றில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஜனா அவர்கள் குறித்த மதுசார உற்பத்தி நிலையத்திற்கு தான் ஆதரவு என தெரிவித்தாகவும் அப்போது அங்கிருந்தவர்கள் கைதட்டி அதனை வரவேற்றதாகவும் உரையாற்றினார்.
அந்தவேளையில் குறுக்கிட்ட ஜனா யோகேஸ்வரன் ஐயா நீங்கள் அந்த கூட்டத்திற்கு வரவில்லை.அவ்வாறு இருக்கையில் நான் அவ்வாறு ஆதரவு தெரிவித்தாக எவ்வாறு கூறுவீர்கள் என்று கேள்வியெழுப்பினார்.
அதனைத்தொடர்ந்து இருவருக்கும் இடையில் வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்ற நிலையில் நிகழ்வு தொடர்ந்து நடைபெற்றது.
DSC08850DSC08856DSC08988

Post a Comment

0 Comments