சம்மந்தன் ஐயாவை பேசவிடாதீர்கள். அவர் ஒரு துரோகி. நாங்கள் உங்களைத்தான் நம்பி இருக்கிறோம். எங்களை கைவிட்டு விடாதீர்கள் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனின் காலைப் பிடித்து தாய்மார் அழுத சம்பவம் இடம்பெற்றுள்ளது.
முள்ளியவாய்காலில் இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வின் போதே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது சில தாய்மார் முதலமைச்சர் அஞ்சலி உரையாற்ற சென்ற எழுந்து சென்ற போது, சம்மந்தன் ஐயாவை பேச விடாதீர்கள். அவர் ஒரு துரோகி. அவரை வெளியேற்றுங்கள் ஐயா. நாங்கள் சொத்துக்களை இழந்து விட்டோம். உறவுகளையும் இழந்து விட்டோம். உங்களைத் தான் நம்பியுள்ளோம். எங்களை கை விட்டுவிடாதீர்கள் என கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனின் காலைப் பிடித்து கதறினர்.
0 comments: