வலி. வடக்கு தையிட் டிப் பகுதிக் கிணற்றில் இருந்து நேற்றும் பெருமளவு வெடிபொருள்கள் சிறப்பு அதிரடிப் படையினரால் மீட்கப்பட்டன.
குறித்த கிணற்றில் மேலும் வெடிபொருள்கள் இருப்பது கண்டறியப்பட்ட்டுள்ளதால் அவை இன்று இராணுவத்தினரின் உதவியுடன் மீட்கப்பட உள்ளன எனப் பொலிசார் தெரிவித்தனர்.
நேற்றுக் குறித்த கிணற்றில் இருந்து 20 பெட்டிகள் மீட்கப்பட்டன. அந்த பெட்டிகளினுள் பொதி செய்யப்பட்ட நிலையில் 300 கைக்குண்டுகள் , 40 மில்லி மீற்றர் மோட்டார் குண்டுகள் 31, 60 மில்லிமீற்றர் மோட்டார் குண்டுகள் 41 இருப்பது கண்டறியப்பட்டன. அந்த வெடிபொருள்கள் சிறப்பு அதிரடிப் படையினரால் பாதுகாப்பான முறையில் மீட்கப்பட்டன.
வலி.வடக்கு தையிட்டி அரசடிப் பிள்ளையார் கோயிலை அண்மித்துள்ள காணி ஒன்றைத் துப்புரவு செய்யும் பணி இடம்பெறுகிறது. நேற்று முன்தினம் குறித்த காணியிலுள்ள கிணற்றை இறைத்துச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தபோது வெடிபொருள்கள் கண்டறியப்பட்டன.
அது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது. பொலிஸார் சிறப்பு அதிரடிப்படையினரை வரவழைத்தனர். குண்டுகள் சில மீட்கப்பட்டன. மீட்புப் பணிகள் நேற்றும் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.இதனடிப்படையில் நேற்று நண்பகல் வரை குண்டுகள் மீட்கும் பணிகள் இடம்பெற்றன.
அந்தக் கிணற்றினுள் இன்னும் வெடிபொருட்கள் இருப்பது இனம்காணப்பட்டுள்ளது. எனவே இராணுவத்தினரின் உதவியுடன் இன்று அவை மீட்கப்படும் எனப் பொலிசார் மேலும் கூறினர்.
Home »
எமது பகுதிச் செய்திகள்
» தையிட்டியில் பெருமளவு வெடிபொருள்கள் மீட்பு
தையிட்டியில் பெருமளவு வெடிபொருள்கள் மீட்பு
Labels:
எமது பகுதிச் செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments: