நாடாளுமன்றத்தில் 21 ஊமைகள் இருப்பதன் காரணத்தினாலேயே, முஸ்லிம்களின் பிரச்சினைகளை நாடாளுமன்றத்துக்கு கொண்டுச் செல்ல முடியாதுள்ளது என்று, தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான அசாத் சாலி தெரிவித்தார்.
நிகழ்வொன்றில் அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
இங்கு மேலும் கூறிய அவர்,
“புனித நோன்புக்காக சவூதி அரசு அன்பளித்த பேரீத்தம் பழங்களுக்கு, அரசு வரிவிதித்துள்ளதாக அப்பட்டமான பொய்யை சிலர் பரப்பி வருகின்றனர். இது வதந்தியாகும்.
முஸ்லிம்களின் புனிதநோன்பை முன்னிட்டு, மத்தியக் கிழக்கு நாடுகளில் இருந்து கிடைக்கப்பெரும் பேரீத்தம் பழங்கள், முற்றிலும் வரி நீக்கப்பட்டே கிடைக்கின்றன.
இருந்தபோதும் சிலர் இதிலும் அரசியல் இலாபம் தேடுகின்றனர். இதற்கு சரியான பதிலைக் கொடுக்க நாடாளுமன்றத்தில் இருக்கின்ற முஸ்லிம் உறுப்பினர்களால் முடியாதுள்ளது.
அதனால்தான் நாடாளுமன்றத்தல் 21 ஊமைகள் இருப்பதாக கூறுகின்றேன். இந்த ஊமைகளால் எதுவும்செய்ய முடியாது” என்று அவர் மேலும் கூறினார்.
0 comments: