கொழும்பு மீதொட்டுமுல்லையில் மீண்டும் குப்பை மேடு சரிந்து விழாத வகையில் அந்த குப்பை மேட்டை சுற்றி இராணுவத்தினர் பாதுகாப்பு அரண்களை அமைத்து வருகின்றனர்.
மண்ணை கொண்டு இராணுவத்தினர் இந்த பாதுகாப்பு அரண்களை அமைத்து வருகின்றனர்.
மீண்டும் குப்பை மேடு சரிந்து விழக்கூடிய அபாயம் நிலவுவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ள நிலையிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


0 Comments