புத்தாண்டு கால விற்பனைகளில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது 40 வீதம் விற்பனைகள் வீழ்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மக்களின் கொள்வனவு இயலளவு பாதிக்கப்பட்டுள்ளதே விற்பனை வீழ்ச்சிக்கான காரணம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆடைகள் மற்றும் உணவுப் பொருட்கள் போன்றவற்றின் விற்பனைகள் பாதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர் சங்கத்தின் பேச்சாளர் ஹேமக பெர்னாண்டோ இதனைத் தெரிவித்துள்ளார்.
0 Comments