வட,கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களினால் விடுக்கப்பட்டுள்ள பூரண ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்க மட்டக்களப்பு வர்த்தக சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
இது தொடர்பில் கடையடைப்புக்கு அழைப்பு விடுத்து இன்று துண்டுப்பிரசுரம் ஒன்றையும் மட்டக்களப்பு வர்த்தக சங்கம் விநியோகித்துள்ளது.
ஹர்த்தால் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க மட்டக்களப்பு வர்த்தக சங்கம் தீர்மானித்துள்ளதன் காரணமாக நாளை வியாழக்கிழமை வர்த்தக நிலையங்களை மூடி ஆதரவு வழங்குமாறும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
...
0 comments: