காணாமல் போனவர்களின் உறவினர்கள் இன்று காலை ஏ9 பிரதான வீதியை மறித்து கண்ணீருடன் கதறி அழுது ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர்.
கிளிநொச்சியில் போனவர்களின் உறவினர்கள் இன்று 67 வது நாளாக தங்களது கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் காணாமல் போனவர்களின் உறவினர்களின் போராட்டத்திற்கு வலுச் சேர்க்கும் முகமாக மேற்கொள்ளப்பட்ட முழுகதவடைப்பு போராட்டத்தினால் கிளிநொச்சியும் முழுமையாக முடங்கியதோடு வெறிச்சோடி காணப்பட்டது.
தாங்கள் இனி தங்களின் போராட்ட வடிவத்தை மாற்றி தங்களுக்கான தீர்வு கிடைக்கும் வரை அகிம்சை வழியில் போராட போவதாகவும் வலிந்து காணாமல் போனவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
0 comments: