Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

விபத்தில் சிக்கிய புகலிட கோரிக்கையாளர்கள்!

லிபியாவின் தலைநகர் ட்ரைபோலிக்கு அருகாமையில் உள்ள கடற்பரப்பில் புகலிடக் கோரிக்கையாளர்களின் படகு கவிழ்ந்ததில் 97 பேர் காணாமல் போயுள்ளனர் என சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்றைய தினம் விபத்துக்குள்ளான இந்தப் படகில், 120 புகலிடக் கோரிக்கையாளர்கள் பயணித்துள்ளனர்.
அங்கு விரைந்த மீட்புக் குழுவினர் கடலில் மூழ்கியவர்களில் 23 பேர் வரை மீட்டுள்ளனர்.
இந்தப் படகில் பெண்கள், சிறுவர்கள் என புகலிடம் கோரி பயணத்துள்ளனர்.
இதேவேளை, மீட்புப் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், எனினும், இதுவரை 23 பேர் மட்டுமே மீட்கப்பட்டனர் என்றும், மற்றையவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பது குறித்து தெரியவில்லை என்றும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Post a Comment

0 Comments