Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

கிராம சேவையாளர் ஒருவர் மதுபோதைக் கும்பலால் தாக்கப்பட்டார்

கடந்த 16ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.00 மணியளவில் அல்லாரையில் உள்ள வீடொன்றில் அதிக சத்தத்துடன் பாடல்களை ஒலிபரப்பிய மதுபோதைக் கும்பல் ஒன்று கொண்டாட்டத்தில் ஈடுபட்டது. இதனால் தங்களுக்கு பெரும் இடையூறாக உள்ளது என பிரதேச மக்கள் கிராம சேவையாளருக்குத் தெரி யப்படுத்தினர்.
இந்நிலையில், அந்த வீட்டுக்குச் சென்ற கிராம சேவையாளர் வீட்டு உரிமையாளரை அழைத்து பாடல் சத்தத்தை குறைக்குமாறு கேட்டுக்கொண்டார். அதன்போது அவரும் அவரோடு சேர்ந்து மதுபோதையில் இருந்தவர்களும் கிராம சேவையாளரைக் கடுமையாகத் தாக்கினர் எனக் கூறப்படுகின்றது. இதன்போது அவரது கைத்தொலைபேசியையும் பறித்து எறிந்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட கிராம சேவையாளர் அது தொடர்பாக கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தபோதும் பொலிஸார் இதுவரை எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கிராம சேவையாளர் ஒருவரை அவரது கடமை நேரத்தில் தாக்கியவர்களை கைது செய்யாத பொலிஸாரின் செயற்பாடு அப்பகுதி மக்களிடையேயும் தென்மராட்சி பிரதேச செயலக உத்தியோகத்தர்களிடையேயும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Post a Comment

0 Comments