ஆளுநர் அலுவலகத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, வடக்கு மாகாண வேலையில்லா பட்டதாரிகளின் பிரச்சினை குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
குறித்த பிரச்சினை தொடர்பில் வடக்கு மாகாண அவைத் தலைவர், மாகாண அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.வடக்கு மாகாண வேலையில்லா பட்டதாரிகளின் பிரச்சினையை மாகாண சபைதான் தீர்த்து வைக்க வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.
வேலையில்லா பட்டதாரிகளின் விபரங்களை பெற்றுத் தருமாறு தான் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்திருந்ததாகவும் விரைவில் இது குறித்து நல்ல தீர்மானம் எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அத்தோடு, வேலையில்லா பட்டதாரிகளின் பிரச்சினை தொடர்பில் தனக்கு இந்த மாதமே தெரியவந்ததெனவும் இதற்கு தீர்வு காண்பதற்கு தனக்கு சிறிது கால அவகாசம் தேவைப்படுவதாகவும் வடக்கு ஆளுநர் இதன்போது குறிப்பிட்டார்.
0 Comments