மட்டக்களப்பு கிருஸ்ணன் ஆலயமானது பல வரலாறுகளைக் கொண்ட ஆலயமாகத் திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது. இவ்வாலயத்தின் கருவறையில் உள்ள கலசமானது வெடித்த நிலையில் இருந்தமை அவதானிக்கப்பட்டு இந்துக் குருமார்களின் ஒன்றியத்தின் மூலம் அவதானிக்கப்பட்டு அதற்குப் பரிகாரமாக புதியகலசம் மாற்றும் நிகழ்வானது 3.04.2017 ஆரம்பிக்கப்பட்டு கிரியைகள் இடம்பெற்று வருகின்றது. இந்நிகழ்வானது 5.04.2017 அன்று முடிவடைய உள்ளது. புதிதாக மாற்றப்பட்ட கலசத்தினையும் ஏற்கனவே உடைந்த நிலையில் இவ்வளவு காலமும் இருந்த கலசத்தையும் மக்களால் அவதானிக்க முடிகின்றமை குறிப்பிடத்தக்கது இது தொடர்பான படங்களை கீழே காணலாம்.
0 Comments