பட்டிருப்பு தேசிய பாடசாலையின் ஓய்வுபெற்ற ஆசிரியை திருமதி. தனலக்ஸ்சுமி திருநாவுக்கரசு(67 வயது) டெங்கு நோயினால் நேற்று (3.4.2017) திங்கட்கிழமை அதிகாலை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இவர் கிழக்கு மாகாணத்தின் புகழ் பூத்த கல்விமானும், கவிஞரும்,தமிழ் இலக்கிய பேராசிரியரும்,பண்டிதரும்,ஈழத்து முன்னோடிகளில் ஒருவராக திகழ்ந்த புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளையின் மகளாவார்.
டெங்கு காய்ச்சலினால் சுமார் ஏழு நாட்களாக பீடிக்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிசிச்சை பெற்றுவந்துள்ளார்.களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடத்தில் புலவர்மணி வீதியை பிறப்பிடமாகவும்,விசிப்பிடமாகவும் கொண்ட "வாவா" ரீச்சர் மூன்றுபிள்ளையின் தாயாவார்.
பட்டிருப்பு தேசிய பாடசாலையில் இறுதியாக கற்பித்தலை வெற்றிகரமாக மேற்கொண்டு கல்விச்சேவையில் இருந்து இவர் ஓய்வு பெற்றிருந்தார்.பாண்டிருப்பில் தனது மூத்த மகளின் வீட்டில் சிலகாலம் வசித்து வந்தநிலையிலே அங்கு டெங்கு நோய் தாக்கத்திற்கு ஓய்வுபெற்ற ஆசிரியை பீடித்திருந்தார்.இதனால் கல்முனை ஆதார வைத்தியசாலையில் கடந்த செவ்வாய்க்கிழமை அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இவ்வாறான நிலையில் மேலதிக சிசிச்சைக்கா மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று அதிகாலை ஓய்வுபெற்ற ஆசிரியை உயிரிழந்துள்ளார்.
0 Comments