ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகள் தமது வெளிநாடுகள் மீதான தாக்குதல் இலக்குகளை இலங்கை போன்ற அமைதியான நாடுகளிலிருந்து மேற்கொள்வதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் இதனால் புகழிட கோரிக்கையாளர்கள் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு அமெரிக்க இராணுவத்தின் ஆசிய பசுபிக் வலய பிரதானியான மேஜர் ஜெனரல் ஹரி பீ ஹரீஸ் இலங்கையின் பாதுகாப்பு பிரிவினருக்கு அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த அவர் இங்குள்ள பாதுகாப்பு அமைச்சின் பிரதானிகளுடன் நடத்திய கலந்துரையாடலின் போது இந்த விடயம் தொடர்பாக தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மிகவும் ஆபத்தான பயங்கரவாத அமைப்பாக செயற்பட்டு பல்வேறு நாடுகளுக்குள் ஊடுருவி பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு அந்த அமைப்பு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் குறிப்பாக இலங்கை போன்ற நாடுகளில் இலங்கை போன்ற நாடுகளில் அவர்கள் இலகுவாக நுழைய கூடியதாகவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி புகழிட கோரிக்கையாளர்கள் தொடர்பாக மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அவர் எச்சரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சிறிய நாடுகள் மீது சர்வதேசத்தின் பாதுகாப்பு பிரிவின் பார்வை இருக்காமையினால் அதனை பயன்படுத்தி ஐ.எஸ் இயக்கத்தினர் தற்போது சிறிய நாடுகளுக்குள் புகழிடம் பெறுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments