பல நாடுகளின் புலனாய்வு பிரிவு இலங்கை தொடர்பில் அவதானத்தை செலுத்தியுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
கொழும்பு கொள்ளுப்பிட்டியில் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு சொந்தமான 6 ஏக்கர் காணியை, அருகில் உள்ள அமெரிக்க தூதரகம் கொள்வனவு செய்துள்ளதனை தொடர்ந்து இந்த கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்க, பிரித்தானியா, கனடா, அவுஸ்திரேலியா,நியூசிலாந்து உட்பட பல நாடுகள் தங்கள் புலனாய்வு சேவையை நடத்தி செல்வதற்காக மத்திய நிலையம் ஒன்றை உருவாக்குவதற்கு இந்த இடத்தை பயன்படுத்திக் கொள்வதே இதற்கு காரணமாகும்.
குறித்த இடத்தில் அமெரிக்கா தங்கள் அதிநவீன தொழில்நுட்ப ரேடார் கட்டமைப்பு உட்பட தொலைத்தொடர்பு உபகரணங்களை பொருத்துவதற்கு திட்டமிட்டுள்ளது. அவ்வாறு நடந்தால் அதன் ஊடாக ஆசிய எல்லைக்கு கடும் அச்சுறுத்தல் ஏற்பட கூடும் என ஆசிய எல்லை நாடுகளின் புலனாய்வு பிரிவு அவதானத்துடன் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முன்னர் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு சொந்தமான கொள்ளுப்பிட்டியவில் உள்ள 6 ஏக்கர் காணியை இரு நாடுகளின் கொடுக்கல் வாங்களாக அமெரிக்க தூதரகம் கொள்வனவு செய்துக் கொள்வதற்கான அனுமதியை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவே வழங்கியுள்ளார்.
கொழும்பு துறைமுகம், காலி முகத்திடல் மற்றும் கொழும்பு கோட்டை உட்பட இலங்கையின் வர்த்தக நகரங்களின் மத்தியில் அமெரிக்க எல்லை கண்கானிப்பு மத்திய நிலையம் உருவாக்குவது தொடர்பில் இந்தியா மற்றும் சீனா தீவிர அவதானத்தை செலுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க எல்லை கண்கானிப்பு மத்திய நிலையத்திற்காக ரேடார் கட்டமைப்பு ஒன்று பொருத்தினால் சீனா மற்றும் இந்தியா ரேடார் கட்டமைப்பொன்றை பொருத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எப்படியிருப்பினும் அமெரிக்கா கொள்ளுப்பிட்டியில் கொள்வனவு செய்துள்ள காணிக்கு கடுமையான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு சொந்தமான கட்டடங்கள் அனைத்தையும் நீக்கிவிட்டு புதிய நிர்மாணிப்பிற்காக அந்த இடம் தயார்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவின் இந்த நிர்மாணிப்பை தொடர்ந்து இலங்கை தூதரக அலுவலகம் கடும் அதிருப்பதியடைந்துள்ளது.
எல்லையின் செயற்பாட்டு மத்திய நிலையம் காரணமாக இலங்கையின் பாதுகாப்பிற்கு எதிர்வரும் காலங்களில் கடுமையான அச்சுறுத்தல் ஏற்பட கூடும் என வெளிநாட்டு புலனாய்வு பிரிவுகள், இலங்கைக்கு அர சுட்டிக்காட்டியுள்ளதாக சிங்கள ஊடகம் மேலும் செய்தி வெளியிட்டுள்ளது.
0 comments: