மட்டக்களப்பு காந்தி பூங்காவில் ஒன்பதாவது நாளாகவும் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டாதாரிகளின் போராட்டத்திற்கு மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மழை வெயிலையும் பொருட்படுத்தாமல் காந்தி பூங்கா முன்பாகவும் ஒன்றுதிரண்டுள்ள வேலையற்ற பட்டதாரிகள் தமக்கான நியமனங்களை வழங்க மத்திய மாகாண அரசுகள் நடவடிக்கையெடுக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
கிழக்கு மாகாணத்தில் 5000க்கும் மேற்பட்ட வெற்றிடங்கள் பல்வேறு துறைகளில் காணப்படும்போது கிழக்கு மாகாணத்தில் 4500 பட்டதாரிகள் வேலையற்ற நிலையில் உள்ளதாகவும் பட்டதாரிகள் குறிப்பிடுகின்றனர்.
இவர்களின் போராட்டத்திற்கு மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு அமைப்புகளும் அரசியல்வாதிகளும் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்களும் தமது ஆதரவினை தெரிவித்துள்ளனர்.
இன்று காலை குறித்த போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்களுடன் இணைந்து போராட்டத்தினையும் ஊடகவியலாளர்கள் முன்னெடுத்தனர்.
ஒன்பதாவது தினமாகவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வேலையற்ற பட்டதாரிகளுக்கு உரிய பதிலை வழங்கி அவர்களின் நியாயமான போராட்டம் வெற்றியடை உரிய தரப்பினர் முன்வரவேண்டும் என இங்கு ஊடகவியலாளர்களினால் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.



0 Comments