மார்ட்டின் கப்திலின் அற்புதமான 180 ஓட்டங்களின் துணையுடன் நியுசிலாந்து அணி தென்னாபிரிக்க அணியை இன்று இடம்பெற்ற ஓரு நாள் போட்டியில் வெற்றிபெற்றுள்ளது
ஹமில்டனில் இன்று இடம்பெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா 50 ஓவர்கள் முடிவில் 279 ஓட்டங்களை பெற்றது- பதில்அளித்த நியுசிலாந்து அணி 45 ஓவரில் 3 விக்கெட்களை மாத்திரம் இழந்து தனது இலக்கை எட்டியது.
நியுசிலாந்து அணியின் சார்பில் அதன் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் மார்ட்டின் கப்தில் 138 பந்துகளில் 180 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றார்,அவர் 11 சிக்சர்களையும் அடித்தமை குறிப்பிடத்தக்கது.


0 Comments