மட்டக்களப்பு கல்லடியில் வான் ஒன்று மோதிவிட்டுச்சென்ற காரணமாக வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று இரவு 9.30மணியளவில் கல்லடி,முருகன் ஆலயத்திற்கு பின்புறமாகவுள்ள பழைய கல்முனை வீதியில் குறித்த வயோதிபரை வான் ஒன்று மோதிவிட்டு நிறுத்தாமல் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் கல்லடி உப்போடையை சேர்ந்த இந்திரன்சாமி என்னும் சுமார் 75வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.



0 Comments