ஏறாவூரில் இடம்பெற்ற இரட்டைக் கொலை சம்பவம் தொடர்பான சந்தேகநபர்கள் 06 பேரும் இன்றைய தினம் (8) ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.
ஏறாவூர், முகாந்திரம் வீதியை அண்டி அமைந்துள்ள வீடொன்றில் வசித்துவந்த நூர்முஹம்மது ஹுஸைரா என்ற பெண்ணும் (வயது 56) அவரது திருமணமாகிய மகளான முஹம்மது யூசுப் ஜெஸீரா பானுவும் (வயது 32) கொலை செய்யப்பட்ட நிலையில் அவர்களின் சடலங்கள் கடந்த செப்டம்பர் மாதம் 11ஆம் திகதி மீட்கப்பட்டிருந்தன.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் 6 சந்தேகநபர்களின் விசாரணைகள் நீடிக்கப்பட்டிருந்த நிலையில் இன்றைய தினம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.
முஹம்மது பாஹிர் (24) , வசம்பு என்றழைக்கப்படும் உசனார் முஹம்மது தில்ஷான் (28), கலீலுர் ரகுமான் முஹம்மது றாசிம்(23), புஹாரி முஹம்மது அஸ்ஹர் (23), இஸ்மாயில் சப்ரின் (23) மற்றும் 50 வயதுடைய அபூபக்கர் முகம்மது பிலால், ஆகியோரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை கடந்த 25ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட இரட்டைக்கொலைச் சம்பவம் தொடர்பாக பிரதான சந்தேகநபரிடம் நீதிமன்றில் இரகசிய வாக்குமூலம் பெறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments