Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

கிழக்கிலும் தொடர் உண்ணா விரதத்திற்கு தயாராகும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்

வடக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மேற்கொண்ட தொடர் உண்ணா விரத்தை கிழக்கிலும் வெகு விரைவாக நடத்துவதற்கு தீர்மானித்துள்ளோம் என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாளேந்திரன் தெரிவித்தார்.
நேற்றைய தினம் (03) வெள்ளிக்கிழமை ஏறாவூர் பிரதேசத்தில் மாஞ்சோலை கலாசார மண்டபம் திறப்பு விழாவில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர்,
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் பிரதமரின் கருத்து வேடிக்கைக்குரியது, தமிழர்களின் மத்தியில் பிரதமரின் கூற்றை ஒரு கேலிக்கூற்றாகவே பார்க்கன்றார்கள்.
வட, கிழக்கில் தங்களின் உறவுகளைத் தேடி நடாத்தும் போராட்டங்களை தென்னிலங்கையில் உள்ள அரசியல் சக்திகள் நாட்டை குழப்புகின்ற அல்லது அரசாங்கத்தை குழப்புகின்ற செயற்பாடு என சட்டம்போடுகின்றார்கள்.
தமிழ் மக்கள் அரசாங்கத்தை மாற்றவோ அல்லது ஜனாதிபதியாகுவதற்கோ போராட்டங்களை நடாத்த வில்லை, தங்களின் கையினால் இலங்கை பாதுகாப்பு படையினரிடம் உறவுகளை கொடுத்த உறவுகளை விடுதலை செய், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை விரைவாக கண்டு பிடித்து தரவேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்தே பல போராட்டங்களை நடாத்துகின்றார்கள் அதனையே தென்னிலங்கை அரசியல் சக்திகள் பலவாறு சித்தரிக்கின்றார்கள்.
ஏறாவூர் போன்ற எல்லைக் கிராமங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். ஏறாவூர் எல்லைப் பகுதியில் வசிக்கும் தமிழ் மக்களின் வீட்டுத் திட்டம் மற்றும் ஏனைய வசதிகளை மாவட்ட அரச அதிபர் மிக விரைவாக பெற்றுக் கொடுக்க வேண்டும். அது தொடர்பாக விரைவாக அரச அதிபர் பெற்றுக்கொடுப்பதாக உறுதி வழங்கியிருக்கின்றார் என தெரிவித்தார்.

Post a Comment

0 Comments