காலனித்துவ ஆட்சியில் இருந்து சுதந்திரம் பெற்றது, வெறும் ஒற்றையாட்சியை பிளவுபடுத்தி பொலிஸ் அதிகாரங்களுடன் தனித்தனி பிராந்தியங்களாக ஆட்சி செய்வதற்கா? என கேள்வி எழுப்பியதோடு,
இவ்வாறு செயற்பட்டால் 70 ஆவது சுதந்திரத்தினத்திற்கு நாடு முழுமையாக இருக்காது எனவும் மஹிந்த ராஜபக்ச ஆரூடம் கூறியுள்ளார்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றின் மூலமே இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் இவ்வாறு கொண்டாடப்படும் சுதந்திர தின நிகழ்வானது எமக்கு கிடைத்த சுதந்திரம் மற்றும் சுயாதீன தன்மை தொடர்பில் பெற்றோர்கள் , ஆசிரியர்கள், முதியவர்களால் மாணவர்களுக்கு தெளிவுபடுத்தப்படுகின்றது.
ஆனால் இந்த அரச தலைவர்களின் செயற்பாட்டினை பார்க்கையில் 70 ஆவது சுதந்திர தினத்தில் நாட்டில் எது மிச்சமாக இருக்கப்போகின்றது என தெரியவில்லை.
குறிப்பாக நாட்டு வளங்கள் அனைத்தையும் தற்போது வெளிநாடுகளுக்கு விற்று வருகின்றார்கள்.
அத்துடன் ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை போன்றவற்றை அந்த காலத்தில் அந்நிய நாடுகள் விட்டுவிட்டு சென்றவற்றை எல்லாம் தற்போது வெளிநாட்டவர்களுக்கு விற்கவா என மஹிந்த ராஜபக்ஸ சுதந்திர தினதிற்காக விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
0 Comments